20. August 2008 20:09
 
 
சுவிஸ் லவுசானில் அன்னைபூபதி ஞாபகார்த்த விளையாட்டுப் போட்டிகள் (2ம் இணைப்பு) அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
லவுசான் நிருபர்   
25. May 2008 17:47
Poopathy sports - Lausanneஇன்று காலை ஒன்பது மணிக்கு சுவிஸ் லவுசான் மாநிலத்தில் தியாக தீபம் அன்னைபூபதி அம்மாவின் பதின்மூன்றாவது ஆண்டு நினைவுசுமந்த விளையாட்டுப்போட்டிகள் ஆரம்பமாகின.

தியாகதீபம் அன்னைபூபதியினதும் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களுக்குமான  பொதுச்சுடரினை தமிழீழ விடுதலைப்புலிகளின் சுவிஸ்கிளைப் பொறுப்பாளர் திரு.செ.குலம் அவர்கள் ஏற்றி வைத்தார்

அதனைத் தொடர்ந்து மாநிலப் பொறுப்பாளர் திரு.செல்வன் பூபதித்தாய்க்கு ஈகைச்சுடரினை ஏற்றி வைக்க விளையாட்டுதுறை பொறுப்பாளர் திரு.திருக்குமார் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் ஈகைச்சுடரினை ஏற்றிவைத்தர்.

 

அகவணக்கத்தினை தொடர்ந்து மலர்வணக்கத்தினை திரு.செ.குலம் அவர்கள் ஆரம்பித்து வைக்க தொடர்ந்து கறுப்புபட்டி அணிந்தபடி குழுமியிருந்த மக்களும் விளையாட்டு வீரர்களும் அன்னைத்தாய்க்கும் வீரத்தின் நாயகனுக்கும் மலர்வணக்கம் செலுத்தினார்கள்.

திரு.அம்பலவாணர் அவர்களின் ஆரம்ப உரையினைத் தொடர்ந்து போட்டிகள் யாவும் ஆரம்பமாகின. காலை 9.30 மணிக்கு ஆரம்பமான போட்டிகள் மாலை 18.00 மணிக்கு நிறைவு பெற்றது. 

3ம் இடம்:- வானவில் வி.க லுட்சேர்ன்

2ம் இடம்:- தமிழ் இளநட்சத்திர வி.க லீஸ்

1ம் இடம்:- நீலநட்சத்திர வி.க லவுசான்

சிறந்த முன்னிலை விளையாட்டு வீரர் - வினோத் நீலநட்சத்திர வி.க லவுசான்

சிறந்த பின்னிலை விளையாட்டு வீரர்- யசிந்தன் தமிழ் இளநட்சத்திர வி.க லீஸ்

சிறந்த நடுநிலை விளையாட்டு வீரர் - சுஜீவன் நீலநட்சத்திர வி.க லவுசான்

சிறந்த பந்துகாப்பாளர்- நிஷாந் தமிழ் இளநட்சத்திர வி.க லீஸ்

சிறந்த ஆட்டநாயகன்:- சுதன் நீலநட்சத்திர வி.க லவுசான்

இன்றய சுற்றுப்போட்டியின் சிறந்த விளையாட்டுக் கழகம்:-  வானவில் வி.க லுட்சேர்ன்

 
< முந்தைய   அடுத்த >