| பாகிஸ்தானில் குண்டுத்தாக்குதல்: 5 பேர் பலி |
|
|
| சனி, 07 ஜூன் 2008 15:08 |
பாகிஸ்தானின் தென்கிழக்குப் பகுதியில் இன்று சனிக்கிழமை பொலிஸ் குழுவினரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதலில் 3 பொலிஸார் உட்பட 5 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இந்தக் குண்டுத்தாக்குதலில் 9 பொலிஸார் உட்பட 12 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். டெறா இஸ்மாயில்கான் நகரத்தில் துவிச்சக்கர வண்டியில் பொருத்தப்பட்ட குண்டை தூரக் கட்டுப்பாட்டுக் கருவி மூலம் வெடிக்க வைத்துள்ளதாக உள்ளூர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி கப்பார் கைசறானி குறிப்பிட்டுள்ளார். மேற்படி குண்டு பொருத்தப்பட்ட துவிச்சக்கர வண்டியானது முன்னர் குண்டு வெடித்த திறந்த வெளிக்கருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாகக் குறிப்பிட்ட கப்பார் கைசறானி , இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் உடனடி விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகக் கூறினார்.
இந்த குண்டுத்தாக்குதல் பொலிஸாரை இலக்கு வைத்தே மேற்கொள்ளப்பட்டதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். |

பாகிஸ்தானின் தென்கிழக்குப் பகுதியில் இன்று சனிக்கிழமை பொலிஸ் குழுவினரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதலில் 3 பொலிஸார் உட்பட 5 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.