12. October 2008 03:28
 
 
சுவிசில் நடைபெற்ற "மாணவர் எழுச்சி நாள் 08" அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
.   
8. June 2008 10:49
04.jpgதியாகி பொன். சிவகுமார் அவர்களின் 34வது ஆண்டு ஞாபகார்த்தமாக மாணவர் எழுச்சி நாள் 07.06.08 அன்று சுவிஸ் நாட்டில் அரோ நகரத்தில் தமிழ் இளையோர் அமைப்பினரால் நினைவு கூறப்பட்டது. (படத்தொகுப்பு)

16.00 மணியளவில் ஆரம்பமான நிகழ்வில் பொதுச்சுடரினை அரோ மாநிலத்தைச் சேர்ந்த உப பொறுப்பாளர் செல்வன் கிருசாந்தன் அவர்கள் ஏற்றிவைத்தார் அதனைத் தொடர்ந்து தமிழ் இளையோர் அமைப்பின் சுவிஸ்கிளைப் பொறுப்பாளர் செல்வன் திலீபன் அவர்கள் தேசியக்கொடியினை ஏற்றிவைத்தார். பின்னர் தமிழ் இளையோர் அமைப்பு அரோ  மாநில செயற்பாட்டாளர் செல்வி ஜனுயா அவர்கள் ஈகைச்சுடரை ஏற்றிவைத்தார்.

 

 01.jpg 04.jpg 
 06.jpg  08.jpg
 11.jpg  28.jpg
   

(மேலதிக படங்கள்)

தொடர்ந்து பொன். சிவகுமார் அவர்களின் நினைவுப் படத்திற்கு மக்கள் மலர்வணக்கம் செலுத்தினர். அதன் பின்னர் அகவணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. கலைபண்பாட்டுக் கழக இளையோர்களின் எழுச்சி இசை நிகழ்வுடன் ஆரம்பமான கலைநிகழ்வில் மாநில ரீதியாக இளையோர் அமைப்பினர் மிகவும் எழுச்சி கரமான நிகழ்வுகளை தந்திருந்தார்கள்.  இந் நிகழ்வில் தியாகி சிவகுமாரனுடன் பழகிய எழுத்தளாரும் கவிஞருமான அரவிந்தன் அவர்கள் பிரான்ஸில் இருந்து வருகைதந்து சிறப்புரை ஆற்றியிருந்தார்.

வரலாறு சொல்லும் பாடம் எனும் நூல் இவ் விழாவில் வெளியிட்டு வைக்கப்பட்டது. இவ் நூலின் வெளியீட்டு உரையினை கலைபண்பாட்டுக் கழகத்தின் அறிவிப்பாளர் திரு. சுரேஸ் அவர்கள் நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து நூலினை சுவிஸ்கிளைப்பொறுப்பாளர் திரு.குலம் அவர்கள்  வெளியிட்டு வைத்தார். தொடர்ந்தும் பல்வேறுபட்ட எழுச்சி நிகழ்வுகள் நடைபெற்றன. இறுதியாக மாணவர் எழுச்சிப் பிரகடனம் தமிழ் இளையோர் அமைப்பினரால் வாசிக்கப்பட்டது. அத்துடன் தேசியக் கொடி இறக்கலுடன் நிகழ்வுகள் நிறைவு பெற்றன.

 
< முந்தைய   அடுத்த >