SmallMediumLarge NarrowWideFluid
உக்ரைன் நிலச்சுரங்கத்தில் வெடிவிபத்து: 37 பேரைக் காணவில்லை அச்சிடு E-mail
திங்கள், 09 ஜூன் 2008 10:35
  • உக்ரைன் நிலக்கரிச் சுரங்கத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட எரிவாயு வெடிப்பில் 37 சுரங்கத் தொழிலாளர்கள் காணாமல் போயுள்ளதாகத் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இந்த வெடிப்பு சம்பவம் உள்ளூர் நேரப்படி காலை 5 மணிக்கு ஒரு கிலோ மீற்றர் தூரமுள்ள சுரங்கப் பாதையில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
இந்த சம்பவத்தில் 37 ஆண்கள் காணாமல்ப் போயுள்ளதாக குறிப்பிட்ட பிராந்திய கண்ணிவெடி பாதுகாப்பு கண்காணிப்பு பேச்சாளாரான மரீனா நிக்கிரினா, இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற போது சுரங்க வேலையில் ஈடுபடும் 4 தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்ததாகவும், அவர்கள் காயமடைந்துள்ளதாகவும் கூறினார்.
 
இந்த வெடிப்பு சம்பவத்தின் போது சுரங்கத்திற்குச் செல்லும் பாதை சேதமடைந்துள்ளதால் அதற்கு கீழ் செல்வது சாத்தியமற்றதெனவும் அவர் கூறியுள்ளார்.
 
இந்த வெடிப்பு மிகவும் சக்தி வாய்ந்ததென குறிப்பிட்ட பிராந்திய கண்ணிவெடி பாதுகாப்பு கண்காணிப்பு பேச்சாளார், இதன் காரணமாக தமது அலுவலகத்தின் யன்னல்கள் உடைந்துள்ளதுடன் பாரம் துக்கியின் தூண்கள் சேதமடைந்துள்ளதாகவும் கூறினார்.
 
கடந்த வருடம் நடைபெற்ற இவ்வாறான வெடிப்புச் சம்பவங்களில் 106 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் கூறினார்.