|
சுவிஸ் சூரிச் இராதா நடனாலயத்தின் 16 வது ஆண்டின் "ஆடல் கலை விழா" |
|
|
|
.
|
|
11. June 2008 17:59 |
 கடந்த 17 05.2008 அன்று சுவிஸ் சூரிச் இராதா நடனாலயம் தனது 16 வது ஆண்டின் ஆடல் கலை விழாவை மிகச் சிறப்பாக கொண்டாடியது . தாயக மண்ணுக்காய் தன்னுயிர் தந்த மாவீரனின் நினைவைச் சுமந்து அவனின் பாதத்திருவடியை பரதக் கலையின் உயிர் நாதமாய் என்றும் வெளிப்படுத்தும் இராதா நடனாலயம் தனது ஆண்டு விழாவின் ஆற்றுகை அரங்கத்திலும் வெளிப்படுத்தியமை இராதா நடனாலயத்தின் தாயகத்தின் மீதானதான அதன் பற்று என்றால் மிகையாகது .
குறித்த நேரத்துக்கு ஆரம்பமான இந் நிகழ்வுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ்லாந்துக்கிளை பொறுப்பாளர் திரு செ. குலம் அவர்கள் , மற்றும் நாட்டிய கலா வித்தகர் கேரளா சாஸ்திரி ஆகியோர் பிரதம விருந்தினர்களாகவும் , தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ்லாந்துக்கிளை கலை பண்பாட்டுக்கழகப் பொறுப்பாளர் திரு பி . அல்பேர்ட் அவர்கள் சிறப்பு அதிதியாகவும் கலந்து சிறப்பித்திருந்தனர் .
மேலதிக படங்கள்
கனடா நாட்டை சார்ந்த உளவளத்துறை நிபுனர் திரு பிரான்சிஸ் சேவியர் அவர்களும் இக் கலை விழாவில் கலந்து சிறப்பித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது . ஒரு பரத நாட்டிய நிகழ்வின் கலை விழா விடுதலை சார்ந்த எழுச்சி நிகழ்வு போல் அமைந்திருந்தது அமைத்திருந்ததை உள்ளுணர்வோடு உணர முடிந்தது . அணிசேர் கலைஞர்களின் இசை வெளிப்பாடு , கலை செல்வங்களான மாணவர்களின் அர்பணிப்புடன் கூடிய அரங்கியல் வெளிப்பாடு என்பன மொத்ததில் இராதா நடனாலய ஆதிபர் திருமதி ஞான சுந்தரி வாசன் , மற்றும் அவரது கலைக்கூட மாணவர்களின் பெற்றோர் ஆகியோரின் ஒன்றுபட்ட கலை அர்பணிப்பின் தனித்துவமாகவே அமைந்திருந்ததை உணர முடிந்தது .
|