| சுவிஸ் சூரிச்சில் நடைபெற்ற தமிழர் நட்புறவுச் சங்கத்தின் "முத்தமிழ் விழா 2008" |
|
|
| . | |
| 11. June 2008 18:13 | |
சுவிஸ் தமிழர் நட்புறவுச் சங்கத்தினால் மூன்றாவது தடவையாக முத்தமிழ் விழா சூரிச்சில் 31.05.2008 அன்று நடாத்தப்பட்டது. இவ் வைபவத்தில் சூரிச் கல்விசார் நிறுவனத்தின் பொறுப்பாளர் Fr. Lang, கணித ஆசிரியர் திரு. Müller யேர்மன் மொழி ஆசிரியை Fr. Kulin,பத்திரிகை ஆசிரியர் சண் தவராஜா, கவிஞர் கி.பி.அரவிந்தன் ஆகியோர் மங்கள விளக்கேற்றி விழாவினை ஆரம்பித்து வைத்தனர்.
இதில் நிலவரம் பத்திரிகை ஆசிரியர் சண் தவராஜா பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்ததுடன். கௌரவ விருந்தினர்களாக குலம் அண்ணா, பிரான்சிஸ் அடிகளார், அம்பலவாணர், கி.பி.அரவிந்தன், போன்றோர் கலந்து கொண்டனர். புலம்பெயர் மண்ணில் தமிழ்ச் சிறார்களின் கல்வியறிவை வளர்ப்பதற்காகவும்இ அவர்களின் எதிர்கால முன்னேற்றத்தினைக் கருத்திற் கொண்டு 12.04.2008 அன்று தமிழ்மொழிஇ கணிதம்இ யேர்மன்மொழிஇ ஆங்கிலம் போன்ற பாடங்களில் பரீட்சை நடாத்தப்பட்டது. இவ்விழாவில் மாணவர்களின் பெறுபேற்றின் அடிப்படையிலும்இ பரீட்சையில் பங்குபற்றிய 516 மாணவர்களுக்கும் நினைவுக் கேடயங்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டமை சிறப்பம்சமாகும். சின்னஞ் சிறார்களின் மழலை மொழியில் கதைகள், பாட்டுகள் இடம்பெற்றதுடன் ராதா நடனாலய மாணவிகளின் வரவேற்பு நடனமும், திருக்கோணேஸ்வர நடனாலய மாணவிகளின் நடனமும் கண்ணுக்கு விருந்தாக அமைந்ததுடன் சுரத்தட்டும் இசைக்கப்பட்டது. இவற்றிற்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல் கவிஞர் திரு.கி.பி.அரவிந்தன் அவர்களால் யாழ் நூலகம் பற்றிய "எரியும் நினைவுகள்" என்ற ஒளிவெட்டும் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும் விழாவானது பரிசளிப்பு வைபவத்துடன் இனிதே நிறைவேறியது. |
| < முந்தைய | அடுத்த > |
|---|