| ஆற்றில் முழ்கி இராணுவ வீரர்கள் மரணம் |
|
|
| ரி.என்.ஜே | |||
| 13. June 2008 09:45 | |||
இராணுவப்பயிற்சியின் போது பேர்ன் மாநிலத்தின் விம்மிஸ் எனுமிடத்திற்கு அண்மையில் கன்டெர் ஆற்றில் (River Kander) மூழ்கி 3 இராணுவத்தினர் பலியாகியுள்ளன். மேலும் இருவரைக் காணவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணியாளர்கள் தொடர்ந்து தேடிவருகின்றனர். மேலும் ஐவர் இவ்விபத்தில் பாதிக்கபட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாகவும் அவர்களில் இருவர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் சுவிஸ் பாதுகாப்பு அமைச்சின் தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் இராணுவப் பயிற்சியின்போது ஆறு இராணுவ வீரர்கள் Jungfrau மலைப்பகுதியில் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் போது நடைபெற்ற விபத்தில் பலியாகினர். நடைபெற்ற விபத்து மிவும் துன்பகரமானது என்று தெரிவித்த இராணுவப்பேச்சாளர் பீலிக்ஸ் என்ட்றிஹ் உயிரிழந்தவர்களின் குடும்பதினருக்கு தனது அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார்.
மீட்பு நடவடிக்கைகள் இராணுவத்தினரும் காவற்துறையும் உள்ளடங்கலாக 80 பேருக்கு மேற்பட்டவர்கள் கொண்ட குழுவினர் தொடர்ந்தும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக மாநில காவற்துறைப் பேச்சாளர் ஒற்றோ தெரிவித்தார். விசேட கமராக்கள் பொருத்தபட்ட இரண்டு உலங்கு வானூர்திகளும் சேவையில் ஈடுபடுத்தபட்டுள்ளது. விசாரணைகள் மேற்படி விபத்து தொடர்பான இராணுவ விசாரணைகளை ஆரம்பமாகியுள்ளதாக இராணுவத்தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது இடம்பெற்ற விபத்தும் கடந்தவருடம் நடைபெற்ற விபத்தும் கடந்த 15 வருடங்களில் இடமபெற்ற மிகவும் மோசமான விபத்து என்று கூறப்பட்டுள்ளது. இராணுவ பயிற்சியின் போது அபாயங்கள் குறித்தான அக்கறையின்மை குறித்து ஊடகங்களால் கேள்வியெழுப்பட்டிருப்பதால் விரிவான விசாரணைகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. |
|||
| < முந்தைய | அடுத்த > |
|---|




இராணுவப்பயிற்சியின் போது பேர்ன் மாநிலத்தின் விம்மிஸ் எனுமிடத்திற்கு அண்மையில் கன்டெர் ஆற்றில் (

