|
பேர்ன் நகரம் ஓறேஞ் நிறத்தின் கைகளில் |
|
|
|
ரி.என்.ஜே
|
|
14. June 2008 08:51 |
சுவிற்சர்லாந்தில் நடைபெற்று வரும் ஐரோப்பிய கிண்ண கால்பந்தாட்ட சுற்றுப்போட்டித்தொடரின் முதல் இரு குழுநிலை ஆட்டங்களிலும் ஹொலன்ட் பெரு வெற்றியடைந்ததைத் தொடர்ந்து பேர்ன் நகரம் முழுவதும் நேற்று ஹொலன்ட கால்பந்தாட்ட விசிறிகளின் வெற்றி கொண்டாடங்களால் ஒறேஞ் நிறத்தினால் ஆக்கிரமிக்கபட்டிருந்த்து.
ஐரோப்பிய கிண்ண போட்டிகள் தொடங்கிய நாளிலிருத்தே பேர்ன்நகரில் ஒறேஞ் நிறமே ஆக்கிரமித்து நின்றதை காணக்கூடியதாக இருந்ததாக சுவிஸ் பத்திரிகைச் செய்திகள் தெரிவித்துள்ளன. சுவிஸ் பாராளுமன்றத்தின் முன்பான Bern Bundesplatz ஒறேஞ் விசிறிகளில் வரவேற்பறையாக மாறியுள்ளது என்று சுவிஸ் பத்திரிகை ஒன்று நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளது.
|