SmallMediumLarge NarrowWideFluid
ஜப்பானில் நிலநடுக்கம்; 3 பேர் பலி அச்சிடு E-mail
சனி, 14 ஜூன் 2008 03:44
jap_quake.jpgவடக்கு ஜப்பானில் இன்று சனிக்கிழமை காலை 8.45 மணியளவில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தால் 3 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

இதன் காரணமாக கட்டிடங்கள் உடைந்துள்ளதுடன், மண்சரிவும் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 
 
 ரிச்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தில், வடக்கு ஐவேற் பகுதி மற்றும் டோக்கியோவின் தெற்கே 500 கிலோமீற்றர் தூரத்திலும் இதன் அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன.
 
இந்த நிலநடுக்கத்தால் 3 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 8 பேர் காயமடைந்துள்ளதாகவும், காயமடைந்தவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையிலுள்ளதாகவும் ஊடக அறிக்கைகள் தெரிவித்துள்ளன.

அத்துடன் 12 க்கும் மேற்பட்டோர் சிறிய காயங்களுக்குள்ளானதாகவும் அந்த ஊடக அறிக்கைகள் குறிப்பிட்டுள்ளன.