| யூரோ 2008 சூரிச் நகரில் ரசிகர்களிடையே கைகலப்பு |
|
|
| ரி.என்.ஜே | |
| 14. June 2008 10:04 | |
நேற்று நடைபெற்ற போட்டிகளில் முடிவில் பேர்ன் நகரில் அமைதியான வெற்றிக்கொண்டாட்டங்களின் மத்தியில் சூரிச் நகரில் இத்தாலிய ரூமேனிய அணிகளுக்கிடையிலான போட்டி முடிவடைந்த பின்னர் நகரத்தில் மையப்பகுதியில் ரசிகரிகளிடையே கைகலப்பு நடைபெற்றுள்ளளது. யூரோ 2008 தொடங்கிய பின்னர் சுவிற்சர்லாந்தில் இடம்பெற்ற மோசமான ரகளை இது என்று சூரிச் நகர காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நள்ளிரவிற்கு சற்று முன்னர் நகரில் இடம்பெற்ற கலகத்தில் பின்னர் 25 வயதான சுவிஸ் இளைஞர் ஒருவர் கடும் காயங்களுடம் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார். நள்ளிரவின் பின்னர் 23 வயதான சுவிஸ் இளைஞர் கத்தியால் குத்தபட்டார். இதைவிட அதிக எண்ணிகையானோர் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர். போட்டிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கையில் Bellevue பகுதியில் 35000 திற்கு மேற்பட்ட கால்பந்தாட்ட விசிறிகள் திரண்டிருந்த போதிலும் அவ்விடத்தில் எவவித கலகமும் இடம்பெறுவில்லை. இதேவேளை பேர்ன் நகரில் போட்டிகளில் முடிவில் ஹொலன்ட அணியினரின் வெற்றி கொண்டாட்டங்கள் அமைதியான முறையில் இடம்பெற்றதாவும் எதுவித அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லை என்றும் பேர்ன் நகர காவற்துறையினர் தெரிவித்துள்ளார்கள். |
| < முந்தைய | அடுத்த > |
|---|