|
பேர்ன் மலைபகுதியில் ஏற்பட்ட விபத்தில் இளைஞர் பலி |
|
|
|
ரி.என்.ஜே
|
|
15. June 2008 18:30 |
பேர்ன் Alplistock மலைபகுதியில் மலை ஏறும் முயற்சியில் ஈடுபட்டிருந்த 28 வயதான நபர் 200 மீற்றர் ஆழத்தில் வீழ்ந்ததில் உயிரிழந்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை மதியம் 12.30 மணிக்கு Berner Oberland ல் இப்பரிதாப சம்பவம் இடம்பெற்றது. விபத்தில் பலியான நபர் தனது ஆறு தோழர்களுடன் Alplistock மலைப்பகுதியில் ஏறிக்கொண்டிருந்போது வடக்குபுறமாக 200 மீற்றர் ஆழத்தில் வீழ்ந்தாக தெரிவிக்கபட்டுள்ளது
மேற்படி நபர் ஆர்கவ் மாநிலத்தை சேர்ந்தவர் என்று பேர்ன் கன்ரோன் காவற்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
|