| கூட்டணியிருந்து பாமக நீக்கம்: திமுக முடிவு |
|
|
| வா.கி.குமார் | |
| 17. June 2008 20:16 | |
|
அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 5 மணிக்கு திமுக உயர்நிலைக் குழு கூடியது. இதில், கூட்டணியிலிருந்து பாமகவை வெளியேற்றுவது என்று முடிவு செய்யப்பட்டது. சமீப காலமாக திமுக}பாமக கட்சிகள் இடையே பல்வேறு பிரச்சினைகளில் மோதல் போக்கு நிலவி வந்தது. ஒரு நிகழ்ச்சியில் வன்னியர் சங்கத் தலைவர் குரு திமுக உயர் தலைவர்கள் குறித்து கடுமையாக பேசியது திமுக தரப்பை பெரிதும் வருத்தமடையச் செய்தது. இதையடுத்து, கடலூர் மாநாட்டிற்கு பிறகு திமுக உயர்நிலைக் குழுவில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும் என்று அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான கருணாநிதி தெரிவித்திருந்தார். அதன்படி இன்று நடைபெற்ற கூட்டத்தில் கூட்டணியிலிருந்து பாமகவை நீக்குவது என்று முடிவு செய்யப்பட்டது. |
| < முந்தைய | அடுத்த > |
|---|





முக தலைமையிலான கூட்டணியிலிருந்து பாமகவை நீக்க திமுக முடிவு செய்துள்ளது.
