20. November 2008 16:08
 
 
லெப்டினன் கேணல் கௌசல்யனின் வணக்க நிகழ்வு 11.02.2005 சுவிஸ் பேர்ண் மாநிலத்தில் நடைபெற்றது அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
.   
15. February 2007 01:40
07.02.2005 அன்று சிறீலங்கா அரசின் ஒட்டுப்படைகள் மேற்கொண்ட கோழைத்தனமான தாக்குதலில் வீரச்சாவடைந்த லெப்டினன்ட் கேணல் கௌசல்யன் , செந்தமிழன் , புகழவன் , விதிமாறன் மற்றும் மாமனிதர் அரியநாயகம் சந்திரநேரு ஆகியோரை நினைவு கூர்ந்து இரண்டாம் ஆண்டு வணக்க நிகழ்வு 11.02.2007 ஞாயிற்றுக்கிழமை 15.30 க்கு ஆரம்பமாகியது.
 
பேர்ண் மாநிலத்தின் Mappamondo மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக தேசியக் கொடியேற்றல் , பொதுச்சடரேற்றல் , அகவணக்கம் , மலர்வணக்கம் என்பன இடம்பெற்றன. தொடர்ந்து  தமிழீழ விடுதலைப்புலிகள் சுவிஸ் கிளை கலை பண்பாட்டுக் கழக இசைக்குழுவினரின் இசையில் எழுச்சிப்பாடல்கள் பாடப்பட்டன.
கௌசல்யன் கலைக்கூட மாணவ மாணவிகள் வழங்கிய நிகழ்வுகளுடன் ஏனைய நடனாலயங்களும் எழுச்சி நடனங்களை வழங்கினர். ஈழம் போய்ஸ் குழுவினரின் மேற்கத்தேய நடனமும் இடம்பெற்றது. தமிழீழ விடுதலைப்புலிகள் கலைபண்பாட்டுக்கழகப் பொறுப்பாளர் திரு. அல்பேட் அவர்கள் ஆற்றிய சிறப்புரை இடம்பெற்றது. நினைவு கூரப்பட்ட மாவீரர்கள் நினைவைச் சுமந்த கவியரங்கம் இடம்பெற்றது.
இளஞ்சிறார்களின் பேச்சுக்களும் கௌயல்யன் ஆற்றிய பணியை தெளிவாகச் சொல்லி நின்றன. தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளையினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் மண்டபம் நிறைந்த மக்கள் கூடியிருந்தனர். 19.00 க்கு நிறைவெய்திய இவ்வணக்க நிகழ்வில் தேசியக் கொடியிறக்கி வைக்கப்பட்டதோடு தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தமிழரின் தாரக மந்திரம் அனைவராலும் வலது கரத்தை உயர்த்தித் தெரிவிக்கப்பட்டு நிகழ்வு நிறைவடைந்த்து..
 
< முந்தைய   அடுத்த >