20. November 2008 16:17
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
29. September 2008 22:52
27. August 2008 15:01
11. October 2008 23:48
13. October 2008 13:01
21. August 2008 23:30
பன்னாட்டு சமூகத்திற்கு இத்தாலியும், கனடாவும் எதிர்மறையான கருத்தை காட்டுகிறது:சுவிஸ் தமிழர அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
சுவிஸ் நிருபர்   
22. June 2008 21:38
swiss_tamil_forum.jpgகனடா மற்றும் இத்தாலி நாடுகள், தமிழ் சமூகத்தின் பார்வையை உலகிற்கு குறைத்து மதிப்பிட்டு காட்டியுள்ளதாக சுவிஸ் தமிழர் பேரவை தனது அறிக்கையில் சாடியுள்ளது.

உலகத் தமிழர் இயக்கத்தை தடை செய்தும், 33 தமிழ் இளைஞர்களை கைது செய்தும் முறையே கனடா மற்றும் இத்தாலி நாடுகள், தமிழ் சமூகத்தின் பார்வையை உலகிற்கு குறைத்து மதிப்பிட்டு காட்டியுள்ளது. இலங்கை அரசு சிறுபான்மையினரான தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையை உலகின் பல மனித உரிமை அமைப்புகள் சுட்டிக்காட்டியும், கனடா மற்றும் இத்தாலியின் செயல்கள் இலங்கையை ஒழுக்கமும், கட்டுப்பாடும் நிறைந்துள்ளதாய் காண்பிக்கிறது. இதனால், இலங்கை அரசு ஊக்கம் பெற்று, மேலும் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையிலும், இராணுவம், தமிழீழ விடுதலைப் புலிகளை வெற்றி கொள்ள அங்கிகாரம் அளிக்கப்பட்டதாய் எடுத்து கொள்ளும் நிலையை உருவாக்கியிருக்கிறது.

தீவிரவாதத்தின் மூலம் எவ்வகையிலும் கொல்லப்படுவதையும், வெறுக்கப்படுவதையும் யாரும் மறுக்க முடியாத உண்மை. ஆனால், அரசின் சமூக, பொருளாதார, அரசியல் அடக்குமுறைகளை தட்டிக்கேட்க ஆயுதம் ஏந்தி போராடுகின்ற புரட்சியாளர்கள், தேசிய விடுதலை போராளிகளை வரலாறு காட்டியுள்ளது. இவ்வகையில் அமெரிக்கா, அயர்லாட்ந், சோவியத் ரசியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் கியூபா என வரலாறு சொல்லுகிறது.  இவைகள் அனைத்தையும் தீவிரவாதம் எனும் சாயத்தை நாம் பூசிவிட முடியாது. பூசவும் கூடாது.

தொடர்ந்து 50 ஆண்டுகளாய் அரச பயங்கர வாதத்தை மேற்கொண்டு வருகிற இலங்கை அரசு, தமிழர் அய்க்கிய விடுதலை முன்னனியின் சுதந்திரமாய் தேர்தெடுக்கப்பட்ட தலைவர்கள் 1976-ல் எற்படுத்தப்பட்டு, 1977 தேர்தலில் போட்டியிட முன்வைக்கப்பட்ட அடிப்படை கருத்து,”தமிழ் தேசியம், சுயச்சையான, மறுசீர்ரமைப்புடன், சுதந்திரமான இறையாண்மையுடனும் அமையப் பெற்ற தமிழீழ நாடு அமைவது தமிழர்களை காப்பாற்ற தோற்றுவிக்கப்படுவது தவிக்க இயலாதது”. 1977-லில் தமிழர் அய்க்கிய விடுதலை முன்னனி அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, நாடாளுமன்றம் சென்றது. அவர்களின் கருத்து, நாடாளுமன்றதை உணர வைத்து வாக்குகள் பெற்று விட வேண்டும் என்பது மட்டும்தானே ஒழிய, தீவிரவாதமன்று. தவிர்க்க முடியாமல் அரச பயங்கர வாதம் வெடித்ததன் விளைவாய், தமிழ்ப் போராளிகள், அதனை எதிர்க்க தோன்றினார்கள்.

பின்னர் பதவியேற்ற அரசுகளும் சிறுபான்மை தமிழர்கள் மீது பயங்கரவாதத்தை தொடர்ந்தது. 1956-லிருந்து, தமிழர்கள் வன்முறைக்கு பலியாகியும், பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டும், பொருற்கள் கொள்ளை சம்பவங்களுக்கு மத்தியில் வாழ வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர். பல கோடி மதிப்புள்ள சொத்து இழப்பு ஏற்பட்டது. பல ஆயிரம் தமிழர்களின் இறப்பினாலும், லட்சக்கனாக்கான மக்கள் இடப்பெயர்வு ஏற்பட்டு வெளிநாடுகளிலும், உள் நாட்டிலும் ஏதிலிகளானார்கள்.

1980 முதல், தொடர்ந்து சிங்கள ஆட்சிகள் தமிழர்களில் அழித்து ஒழிப்புக் கொள்கை காரணமாய், தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்த முற்பட்டனர். இலங்கை இராணுவம், ஒன்றும் அறிய, ஆயுதம் ஏந்தாத தமிழ் இளைஞர்கள் மீது வன்முறையை ஏவிவிட்டது.

இலங்கை அரசு தீயநோக்கோடு வெளியிட்ட இராஜதந்திர கட்டுக்கதைகளில் பன்னாட்டு சமூகம் விழ்ந்தது. தமிழர்கள் மீதும், தமிழ் அமைப்புகளின் மீதும் நடவடிக்கை எடுத்த நாடுகள், இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்பட்டு அல்லல் பட்டுகொண்டிருக்கின்ற வன்முறைகளின் உண்மை நிலையை தெளிவாய் புரிந்து கொள்ளவில்லை. மேற்கண்ட நாடுகளின் பிரதிநிதிகளும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களின் பட்டினி சாவும், அரசு இயந்திரத்தின் மூலம் அன்றாடம் தமிழிர்கள் மீது குண்டு வீசப்படுவதைப் பற்றியும் தெரிந்து கொள்ளவோ அல்லது அங்குள்ள நிலவரங்களை பார்த்ததோ கிடையாது.

கனடாவில் உலகத் தமிழர் இயக்கத்திற்கு தடை:

கனடா நாடு பொதுவாய் அமைதி நாடாயும், கிட்டத்தட்ட 4 லட்சம் தமிழ் மக்களையும் கொண்டுள்ளது. கனடா மக்கள் தொகையில் 150000 இரண்டாம் தலைமுறை தமிழ் இளைஞர்கள், தமிழர்களாகவோ அல்லது இலங்கை நாட்டு குடிமகனாகவோ சேர்த்துக் கொள்ளப்படவில்லை. 20,000 சிங்களர்களும் கனடாவில் வசிக்கின்றனர்.

கனடா அரசின் திரு. ஸ்டிபன் கார்ப்பர், குற்ற நடைமுறைச் சட்டத்தின் கீழ் ஜுன் 13-லில், உலகத் தமிழ் இயக்கத்;தை தடை செய்யப்பட்டதை கனடா தமிழர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தமிழ் புலிகளின் நெடுங்கால ஏதிர்பாளாரான கனடாவின் பொது பாதுகாப்புத் துறையின் திரு. ஸ்டாக் வெல்டே, முன்னாள் தலைமை அமைச்சர் திரு. ஜுன் கிருஷ்டியன் மற்றும் திரு. பால் மார்டினையும் புலிகளின் மீது அமைதியாய் எடுக்கப்பட்டு வந்த நடவடிக்கையை கண்டித்தே வந்துள்ளார்.

கனடிய அரசு தீவிரவாததிடமிருந்து தேசிய பாதுகாப்புக்காக மற்றொரு முறையும் ஓர் தீர்வை எடுத்துள்ளது. கனடாவில் புலிகளின் முன்னனி அமைப்பான உலகத் தமிழர் இயக்கத்தை தடைப்பட்டியலில் சேர்த்ததன் விளைவு, தீவிரவாதத்திற்கெரான உலக போரில் எமது பாதுகாப்பில் முக்கிய பாதையை வகுத்துள்ளதாய், திரு திரு. ஸ்டாக் வெல்டே கூறினார்.

ஆனால், கனடா தமிழர்கள், பெரும் துன்ப நிலையில் இருந்த பொழுது, 1986-ல் ஏற்படுத்தப்பட்ட உலகத் தமிழர் இயக்கத்தின் மீது, அரசு தற்பொழுது கூறும் அபாண்டமான குற்றச்சாட்டு பெரும் குழப்பத்தையே ஏற்படுத்தியுள்ளது. இவ்வமைப்பின் மூலம் திரட்டிய நிதி, இலங்கையில் போரின் விளைவாய் இடப்பெயர்வில் பாதிக்கப்பட்டு அவலநிலையிலுள்ள மக்களுக்கு உதவிடும் வகையில் அனுப்பப்பட்டது.

2004-ல் ஏற்பட்ட ஆழிப் பேரலையின் போது உலகத் தமிழர் இயக்கமும், உலகின் பல நாடுகளிலுள்ள அமைப்புகள், தமிழ் பகுதிகளான வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்கு உதவிகளை குவித்தன. ஆனால் இலங்கை அரசு, இவ்வகை உதவிகளை புலிகள் பெற்று விடுவார்கள் எனக் கூறி, பன்னாட்டு அரசு சார அமைப்புகளை அனுமதிக்க மறுத்தது.

அந்த நேரத்தில் புலிகளின் பகுதிகளுக்கு டி.ஆர்.ஓ மற்றும் உலகத் தமிழர் இயக்கம் போன்ற பல அமைப்புகள் மனித நேய அடிப்படையில் உதவிகளை அளித்து வந்தன. அப்பொழுது, ஆயிரக்கானக்கான மக்கள் புலிகளின் பகுதிக்குள் சென்று இவ்வமைப்புகளிடமிருந்து உதவிகளை பெற்று வந்தனர். இவ்வகை உதவிகளை பன்னாட்டு தமிழ் சமூகத்திடமிருந்து பெற்று, டி.ஆர்.ஓ மற்றும் பல அமைப்புக்கள் மிகுந்த சிரத்தை எடுத்துக்கொண்டு உதவியதை உலகின் பல தலைவர்கள் அங்கிகரித்தனர். இவ்வுதவி கிடைக்கவில்லையெனில், பல்லாயிரம் மக்கள் மடிந்திருக்கக்கூடும்.

பணத்திற்காக அச்சுறுத்தும் நபர்களையோ அல்லது மிரட்டும் நபர்களையோ அடையாளம் கண்டு, அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கையை கனடிய அரசு எடுக்கட்டும் என்பதே இன்றைய கனடிய தமிழ் மக்கள் எழுப்பும் கேள்வி. மேற்சொன்ன பண உதவிகள் வெளிநாட்டிலுள்ள தமிழர்களின் சொந்தங்களுக்கு சென்று அடையாமல் இருந்திருக்குமெயானால், பட்டினியால் வாடும் மக்களுக்கு வேலையில்லாமல் போயிருக்கும், விவசாயமும் மீன்பிடி தொழிலும் பாதிக்கப்பட்டிருக்கும். அதேசமயம், வடக்கு மற்றும் கிழக்கில் இலங்கை இராணுவ கொடுமைகளுக்கு பாதிக்கப்பட்டு ஆயிரமாயிரம் மக்கள் இடப் பெயர்வும், நிலையான ஊனம் ஏற்பட்டு, இறப்புகள் நிகழ்ந்திருக்கும்.

இவ்வகையில் மேற்கொள்ளப்பட்ட் வெளிநாட்டு உதவிகளின் விளைவாய் இலங்கை அரசுக்கு சேர வேண்டிய நிதி, நேரடியாய் சென்றிருந்ததால், இலங்கை அரசு  இந்த நிதியை கொண்டு தமிழ் மக்களுக்கு எதிராய் ஆயுதங்களை வாங்கி குவித்திருக்கும்.

கனடா கன்சர்வேட்டிவ் அரசின் குழப்பமான சூழ்நிலையைடுத்து, ஷெல்லப் ஏஞ்சில்ஸ்’, எனும் அமைப்புடன் பைக்கர் குழுவுடன் ஒரு சமயம் இருந்து வந்த பழைய பெண் உறவுக்காரி வீட்டில், முன்னால் வெளி விவகார துறை அமைச்சர் திரு. மெக்சிம் பெர்னர் வகைப்படுத்தப்பட்ட ஆவணங்களை அங்கு கண்டுபிடிக்கப்பட்டதை கன்சாவேட்டிவ் அரசின் குழப்பமான சூழ்நிலையில், உலகத் தமிழர் இயக்கம் பட்டியலில் சேர்க்கப்பட்டது. இந்நிலையில் சென்ற 28 மே-2008ல் பெர்னர் தனது பதவியை இராஜினாமா செய்தார். இதன் விளைவாய், ப்ளாக் குபெக்காய், என்.டீ.பீ. மற்றும் எதிர்கட்சிகளின் நுட்பமான ஆய்வில்  கனடிய ஆளும் அரசு சிக்கலில் இருக்கிறது. இதனால் திரு பெர்னரின் ஊழல் குற்றச்சாட்டிலிருந்து மக்களையும், எதிர்க்கட்சிகளின் கவனத்தை திசை திருப்பவும், உலகத் தமிழ் இயக்கம் ஓர் தீவிரவாத இயக்கமாய் முன்னெடுக்கப்பட்டு பட்டியலிடப்பட்டது.

உலகத் தமிழ் இயக்கத்தின் அமைப்பாளர்கள் முதலில் அரசிடம் கோரிக்கை வைக்க எண்ணியும், இது வெற்றிகரமாய் அமையவில்லையெனில் பின்னர் இது குறித்து நீதிமன்றத்தை நாடவுள்ளனர்.

இலங்கை வெளி விவகார அமைச்சர் திரு. ரோகித்தா போகாலகாமா, கனடிய வெளி விவகார அமைச்சுடன் தொடபெடுத்து நன்றிகளை தெரிவித்ததோடு அல்லாமல்  உலகத்தமிழ் இயக்கத்திற்கு ஏதிரான நடவடிக்கைகள் எடுத்திருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துகொண்டு, மேலும் தீவிர வாதாத்திற்கு ஏதிராய் பணம், பொருள் மற்றும் தார்மிக அடிப்படை ஆதரவு தெரிவிக்கும் மற்ற பிற முன்னனி அமைப்புகளின் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் கேட்டு கொண்டுள்ளார்.

மேலும், அவர்,’இலங்கையிலுள்ள அப்பாவி மக்களை கொன்று குவிக்க ஆயதங்களை வாங்குவதற்கு உதவிகரமாய் விளங்கக்கூடிய முன்னனி கொடை அமைப்புகளையும், உலக அளவில் பணம் மாற்றும் செய்யும் வலைகளையும் கண்டறிந்து முறியடிக்க வேண்டும்,” என்று கூறியுள்ளார்.

இலங்கை வெளிவிவகார அமைச்சர் மேலும், அய்ரோப்பிய ஒன்றியம் புலிகளை தீவிரவாத அமைப்பை தடை செய்திருந்த போதிலும், புலிகளுக்கு ஆதரவான ஆர்ப்பட்டங்களை அனுமதிப்பது குறித்து ஆழ்ந்த கலலையை தெரிவித்துள்ளார். இவ்வகையில் கொடுக்கப்படும் அனுமதி, இலங்கையின் இறையான்மையையும், ஒற்றுமையையும் அய்ரோப்பிய ஒன்றியத்தின் கொள்கைக்கு விரோதமாய் இருக்கிறது, என்கிறார். வெளிநாட்டு மண்ணில், புலிகளுக்கு ஆதரவாய் வழங்கும் நிதியத்தையும், பிரச்சாரத்தை செய்யும் முன்னனி அமைப்புகளை பன்னாட்டு சமூகம் தடுப்பதற்கான நடவடிக்ககைளை மேற்கொள்ள வேண்டும், என்றும் கூறுகிறார்.

தமிழ் இளைஞர்களை சிறைப்படுத்திய இத்தாலி:

இலங்கை வெளி விவகாரத்துறை அமைச்சர் வெளியிட்ட அறிக்கைக்கு அடுத்த நாளே, இத்தாலி அரசு அந்நாட்டு மண்ணிலுள்ள தமிழர்கள் மீது நடவடிக்கை எடுத்தது. 33 ஈழத்தமிழர்கள், புலிகள் அமைப்பை சார்ந்தவர்கள் எனக் கூறி சிறைப்படுத்தியுள்ளது. தொடந்து 28 நபர்களை சந்தேகத்தின் அடிப்படையில் புலிகளுக்கு நிதி உதவி செய்தார்கள் என்ற பெயரில் சோதனையிடப்பட்டது. மேலும் பல்லர்மோ மற்றும் சிசில் நகரில் தனித்தனியே  நடத்திய சோதனையில் 5 நபர்கள் பிடிக்கப்பட்டுள்ளனர். மேலும் 200 மேற்பட்ட காவல்துறையினர் இத்தாலி முழவதும், தெற்கில் நெப்பிலிலிருந்து வடக்கே பலேக்னா, சிசிலி தீவு வரை சோதனை நடைபெற்றதாய் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் அனைத்திலும் தமிழர்கள் பாதிக்கப்பட்டனர். கொழும்பு அரசின் அழுத்ததின் விளைவாய், இந்திய அரசு ஈழத்தமிழர்களை பொய்யான புலிகள் எனக் கூறி சிறைலிட்டது. சுpறைப்படுத்தப்பட்ட தமிழ் இளைஞர்கள், அரசு அதிகாரிகளுக்கு இலஞ்சப்பணம் கொடுத்து வெளி வந்தால் அவர்களுக்கு வேலையோ, சரியான படிப்போ பெற முடியாமற் போகிறது. தமிழ் இளைஞர்கள் இலங்கை உட்பட எங்கு சென்றாலும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இலங்கை அரசு எப்பொழுது சிறுபான்மை தமிழ் மக்களின் குறைகளை நிவர்த்தி செய்கின்றதோ, அப்பொழுதுதான் தீவிரவாதம் முழமையாய் நிறுத்தப்படும். அரசியல் ரீதியாய் அமைதி வழி கண்டால் தான் இலங்கையில் தீவிரவாதம் நிற்கும். இதைத்தான் எல்லோரும் விரும்புகின்றனர். அறிவு வழியில் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவேண்டும்.

இன விவகாரத்தை பயன்படுத்தி இலங்கை அரசியல் விளையாட்டை, அண்டை நாடான இந்திய மட்டுமே ஈடுபடுத்தி வந்தது. ஆனால், தற்பொழுது, மேற்கு நாடுகளின் கதவுகளும் இந்த இனச்சிக்களுக்குள் வந்து விட்டது.

பன்னாட்டு சமூகம், அரச பயங்கர வாதத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிற்க வேண்டும். தன் நாட்டு நீதிக்காகவும், சுய நிர்ணயத்திற்காகவும் போராடிவரும் தமிழ் மக்கள் எப்பொழுதும், இவ்வுலகிற்கு ஆபத்தாய் இருக்க மாட்டார்கள்.

 
< முந்தைய   அடுத்த >