SmallMediumLarge NarrowWideFluid
எண்ணெய் உற்பத்தியாளர்கள் இலாபத்தில் ஒருபங்கை முதலீடுசெய்யவேண்டும்- பிரித்தானியப் பிரதமர் அச்சிடு E-mail
திங்கள், 23 ஜூன் 2008 14:23
brown.jpgகாற்றுப் பண்ணை மற்றும் அணுசக்தி ஆகியன தொடர்பாக பிரித்தானியாவில் நீண்டகாலத் திட்ட அடிப்படையில் எண்ணெய் உற்பத்தியாளர்கள் தங்களது இலாபங்களின் ஒரு பகுதியை முதலீடு செய்ய வேண்டுமென பிரித்தானியப் பிரதம மந்திரி கோர்டன் பிரவுண் விரும்புகிறார்.

எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் இதற்கான விலையேற்றத்தை குறைக்கலாமென  ஜெகத்தாவில் நடைபெற்ற கூட்டத்தில் பிரவுண் அழுத்திக் கூறியுள்ளார். 
 
1970களில் இருந்த எண்ணெய் விலையேற்றத்தைவிட தற்போது ஆபத்தான நிலையிலுள்ளதெனவும், பல சமநிலையிலுள்ள சக்தி சந்தைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் கோர்டன் பிரவுண் கூறியுள்ளார்.
 
30 வருடங்களில் 3ஆவது பாரிய எண்ணெய் அதிர்ச்சிக்கு முகம் கொடுத்து வருவதாக குறிப்பிட்ட கோர்டன் பிரவுண், எண்ணெய் விலையேற்றமானது உலகின் ஒவ்வொரு நாட்டிலும் மும்மடங்காக அதிகரித்துள்ளதாக கூறினார்.
 
இந்த எண்ணெய் விலையேற்றமானது மக்களின் வாழ்க்கைத் தரத்தில் 
பாரிய சுமையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விடயம் தொடர்பாக எண்ணெய் உற்பத்தியாளர்கள் மற்றும் எண்ணெய் வாடிக்கையாளர்களுக்கும் இடையில் தற்பொழுது புதிய உடன்படிக்கையொன்று எட்டப்பட வேண்டியது அவசியமாகுமென அவர் கூறினார். 
 
அணுசக்தி மற்றும் புதுப்பித்தல் ஆகியவற்றால் தங்களால் எண்ணெயின் பாவணையில் தங்கியிருப்தைக் குறைத்துக்கொள்ள முடியுமென பிரித்தானியப் பிரதம மந்திரி தெரிவித்துள்ளர்ர். 
 
எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் தமது கிளைகளை பரப்பவுள்ளதாகவும், இதன் காரணமாக சக்தி சந்தையில் சமநிலையைப் பெற்றுக் கொள்ள முடியுமெனவும் தாம் விரும்புவதாக அவர் கூறினார்.

இந்த நிலையில் எதிர்வரும் வருடங்களில் எண்ணெய்ப் பாவனையில் தங்கியிருப்பதை குறைத்துக் கொள்ள முடியுமென்பதை இது தங்களுக்கு  உணர்த்துமென அவர் கூறினார். 
 
ஒவ்வொரு எண்ணெய் வாடிக்கையாளர்களான வாகனம்  வைத்திருப்பவராயினும் சரி, எரிவாயு உபயோகிப்பவராயினும் சரி எண்ணெய் விலையேற்றம் தொடர்பில் பாதிப்பை உணருவதாக கோர்டன் பிரவுண் குறிப்பிட்டுள்ளார்.