| அணுசக்தி ஒப்பந்தத்துக்கு மூத்த விஞ்ஞானிகள் எதிர்ப்பு |
|
|
| செவ்வாய், 24 ஜூன் 2008 09:28 |
|
இந்த ஒப்பந்தத்தில் இந்தியாவுக்கு உள்ள பாதுகாப்பு விஷயங்கள் என்ன என்ற விவரங்களை நம்நாட்டில் முழுமையாக விவாதிக்க வேண்டும் அல்லது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் இடதுசாரிகள் பிரதிநிதிகள் அடங்கிய குழுவில் விவாதிக்கப்பட வேண்டும். அதற்கு முன்னதாக அந்த பாதுகாப்பு அம்சங்களுக்கு சர்வதேச அணுசக்தி ஏஜென்சியிடம் ஒப்புதல் பெற முயற்சிப்பதை கடுமையாக எதிர்க்கிறோம் என்று அந்த விஞ்ஞானிகள் கூறினர். அணுசக்தி கமிஷன் முன்னாள் தலைவர் பி.கே. ஐயங்கார், அணுசக்தி ஒழுங்குமுறை போர்டின் முன்னாள் தலைவர் ஏ. கோபாலகிருஷ்ணன், பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் இயக்குநர் ஏ.என். பிரசாத் ஆகியோர் இதுபற்றி கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். இந்த ஒப்பந்தம் தொடர்பாக முக்கியமான சந்தேகங்களுக்கு அரசு விடையளிக்கவில்லை. இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்துவிட்டால், மற்ற நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் வர்த்தக ரீதியிலான அணுசக்தி பரிமாற்றத்தை அமெரிக்கா தான் கட்டுப்படுத்தும். இந்த ஒப்பந்தம் மூலமாக கிடைக்கப்பெறும் அணுசக்திக்கு அதிக செலவாகும். இத்தகைய அணு மின்சாரம் இந்தியாவுக்குத் தேவையா என்ற கேள்வி எழுகிறது. அதுமட்டுமின்றி நமது வெளிநாட்டுக் கொள்கையைத் தீர்மானிக்கும் சுதந்திரமும் போய்விடும். நமது தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளும் அணு ஆராய்ச்சியும் தடைபடும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. |








இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் பற்றி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் இடதுசாரிகள் குழுவில் விவாதிக்காமலேயே அந்த ஒப்பந்தத்துக்கு சர்வதேச அணுசக்தி ஏஜென்சியிடம் ஒப்புதல் பெற அரசு முயற்சிப்பதை மூத்த அணுசக்தி விஞ்ஞானிகள் எதிர்க்கின்றனர்.