SmallMediumLarge NarrowWideFluid
ஈராக்கிய படையினருக்கு அமெரிக்காவின் உதவி தொடர்ந்தும் தேவை-அமெரிக்கா அச்சிடு E-mail
செவ்வாய், 24 ஜூன் 2008 09:49

afgan.jpgஈராக்கிய படைவீரர்களுக்கு அமெரிக்காவினுடைய உதவிகள் இன்னமும் தேவைப்படுவதாக அமெரிக்கா தெரிவிக்கின்றது. 

ஈராக்கிய படைவீரர்கள் களத்தில் முன்னேற்றமடைந்த நிலையிலுள்ள போதும் முக்கியமான உதவிகள் இல்லாததன் காரணமாக,  அவர்களால் தனித்து இயங்க முடியாதுள்ளதாக அமெரிக்காவின் சிரேஷ்ட தளபதி நேற்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளார்.
 
ஈராக்கியப் படைகள், போர் நடவடிக்கைகள் மற்றும் அதன் பாதுகாப்பு தொடர்பில் முழுமையான கவனம் செலுத்தவில்லையெனவும் இராணுவத் தளபதி ஜெனரல் லியோட் ஒஸ்ரின் குறிப்பிட்டுள்ளார்.
 
ஈராக்கியப் படைவீரர்களுக்கு எந்தப் பகுதிகளையும் பிரித்துக் கொடுப்பதற்கான தீர்மானங்கள் எதுவுமில்லையெனவும் ஒஸ்ரின், பென்ரகனில் வைத்து நிருபர்களுக்கு கூறியுள்ளார்.

 இந்ந நிலையில் அமெரிக்க காங்கிரஸினுடைய காலாண்டு அறிக்கையின்படி ஈராக்கியப் படைவீரர்கள் 2008 ஆம் ஆண்டு முடிவில் சுயமாக பணிகளை முன்னெடுக்க முடியுமென அமெரிக்காவின் சிரேஷ்ட இராணுவ அதிகாரி கூறியுள்ளார்.

இருப்பினும் அவர்களுக்கு அமெரிக்காவின் இராணுவ நிர்வாகவியல் மற்றும் திறமையுள்ள உதவியாளர்கள் இன்னமும் தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.