20. November 2008 18:44
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
13. October 2008 13:01
12. October 2008 00:13
4. October 2008 12:47
19. August 2008 23:28
15. October 2008 12:52
புதிய வாகன எரிபொருள் "Bioethanol"அறிமுகம்: லிற்றர் 1.35 SFr. அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
ரி.என்.ஜே   
24. June 2008 22:52

bioethanol_1.jpgஜூலை முதலாம் திகதியில் இருந்து சுவி்ற்சர்லாந்தில் "Bioethanol"  எனப்படும்  வாகன எரிபொருள் சந்தைக்கு வரவுள்ளது.இதற்கு வரிவிலக்கு அளிக்கபட்டு  லிற்றர் 1.35 பிராங்கிற்கு விற்பனை செய்யபடும்.

சுவிற்சர்லாந்தின் கூட்டாட்சி அரசிற்கு தனியுரிமை அளிக்கபட்டு இறக்குமதி செய்யபடவுள்ள இவ் எரிபொருள். சுற்றுப்புற சூழலுக்கு பாதுகாப்பளிக்க கூடிய விதத்தில் இப்புதியவகை எரிபொருள் உற்பத்தி செய்யபட்டுள்ளளதாக சுவிஸ் மதுசார நிறுவன இயக்குனரான அலெக்சாண்டர் ஸ்மித் தெரிவித்துள்ளார். ஜூலை,1 ம் திகதியில் இருந்து சந்தைக்கு வரவுள்ள Bioethanol சுவிஸ் எரிபொருட்கள் வரிகள் சட்டத்தின் பிரகாரம் வரிவிலக்கு அளிக்கபடுவதால்  லிற்றர் 1.35 பிராங்கிற்கு விற்பனை செய்யபடும் என்று எதிர்பார்க்கபடுகின்றது. சாதாரணமான Unleaded (Bleifrei)  என்னும் பெற்றோலுடன் 5% இயற்கைத் தயாரிப்புக்கள் கலக்கப்பட்டு இப்புதியவகை எரிபொருள் உற்பத்தி செய்யபடவுள்ளது.

தற்போதய நிலையில் மக்களால் பயன்படுத்தப்படும் Unleaded 95 (Bleifrei 95) பெற்றோலுக்கு பதிலாக இப்புதிய வகை பெற்றோல் பயன்படுத்த முடியும். பெற்றோல் விலை தொடந்தும் அதிகரித்து வருவதால் இப்புதிய வகை உற்பத்தி விலை குறைவாதலால் மக்களிடம் வரவேற்பை பெறும் என்று நம்பபப்படுகிறது.

 
< முந்தைய   அடுத்த >