SmallMediumLarge NarrowWideFluid
அணு ஒப்பந்த விவகாரம்: டி.ஆர். பாலுவுடன் சோனியா ஆலோசனை அச்சிடு E-mail
புதன், 25 ஜூன் 2008 15:28

sonia.jpgஅமெரிக்க அணு ஒப்பந்தம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் டி.ஆர். பாலுவுடன் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினார்.

அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தால் ஏற்பட்டுள்ள சிக்கலுக்கு தீர்வுகாண திமுக விரும்புகிறது. வழக்கத்துக்கு முன்னதாக தேர்தல் நடத்துவதை தமது கட்சி விரும்பவில்லை என்று சோனியாவிடம் டி.ஆர். பாலு விளக்கியதாகத் தெரிகிறது.

தற்போதைய சிக்கலுக்கு நல்ல தீர்வுகாண்பது குறித்து இருவரும் ஆலோசித்ததாக பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது டி.ஆர். பாலு தெரிவித்தார்.

அணு ஒப்பந்தம் தொடர்பாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி - இடதுசாரி கட்சிகள் இடையே புதன்கிழமை நடைபெறவிருக்கும் கூட்டத்தில் நல்ல முடிவு எட்டப்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மத்திய அரசுக்கு உடனடியாக ஆபத்து இருப்பதாக நான் நினைக்கவில்லை. வழக்கத்துக்கு முன்னதாக தேர்தல் நடைபெறும் என்று நான் நினைக்கவில்லை என்றார் பாலு.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் தலைவர்கள் சரத் பவார், லாலு பிரசாத், லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான் ஆகியோரை திங்கள்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினார் காங்கிரஸ் தலைவர் சோனியா.

இந்த நிலையில் அணு ஒப்பந்தத்தை முழுமையாகக் கைவிட வேண்டும் என்ற எங்கள் நிலையில் எந்த மாற்றமும் இல்லை என்று

இடதுசாரித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.