20. August 2008 20:25
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
30. July 2008 06:43
16. August 2008 15:10
3. August 2008 15:57
31. July 2008 18:12
27. July 2008 09:43
லுசேர்ன் ஜோட்லெர் விழாவில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
ரி.என்.ஜே   
28. June 2008 16:57
jodlerluz_murasam.jpgலுசேர்ன் நகரில் வியாழன் மாலையில் இருந்து ஆரம்பமாகி நடைபெற்று வரும் சுவிஸ் பாரம்பரிய கிராமிய இசையான ஜோட்லெர் இசைவிழாவில் நேற்று வெள்ளி 27.06.2008 மட்டும் ஒரு லட்சத்திற்கு அதிகமானோர் பங்கேற்றுள்ளனர். பாரம்பரிய இசை வாத்தியமான அல்ப்ஹோர்ன் இசையுடன் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பல்வேறுபட்டோர் இவ்விசை விழாவில் கலந்து கொண்டு நகரம் பாரியளவில் விழாக்கோலம் பூண்டுள்ளது.  

மூன்று நாட்கள் நடைபெறவிருக்கும் இவ்விழாவில் 200 000 திற்கு மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என்று விழா ஒருங்கிணைப்பாளர்கள் எதிர்பார்த்திருந்தனர் .எதிர்பார்த்ததற்கு மேலாக அதிக அளவான மக்களை இவ்விழா ஈர்த்துள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

 

இருப்பினும் வெள்ளி இரவு எதுவித அசம்பாவிதங்களும் நகரில் இடம்பெறவில்லை என்று லுசேர்ன் நகர காவற்துறையினர் திருப்தி தெரிவித்தனர். விழா நடைபெறும் காலப்பகுதியில் நகர் ஊடான வாகனப்போக்கவரத்து ஒழுங்கில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நகரின் முக்கிய ஏரிக்கரை பாலம் ஊடான போக்குவரத்து முற்றாக நிறுத்தபட்டுள்ளது.

சுவிற்சர்லாந்தின் கிராமிய விவசாயிகளால் இசைக்கட்டு வருவதே "ஜோட்லெர் இசை" எனப்படும் பழமை வாய்ந்த இசை என்பது குறிப்பிடத்தக்கது.

 
< முந்தைய   அடுத்த >