| உலகில் சித்திரவதைகள் தடுத்து நிறுத்தப்படவேண்டும் - வெளிநாட்டமைச்சர் கால்மி ரே |
|
|
| ரி.என்.ஜே | |
| 1. July 2008 07:42 | |
உலகின் எந்த மூலையிலாவது மக்களுக்கெதிரான சித்திரவதை நடவடிக்கள் செய்யப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று சுவிஸ் வெளிநாட்டமைச்சர் திருமதி கால்மி ரே கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் “ஐக்கிய நாடுகள் சபையின் சம்பிரதாய ஒப்பந்தம் சித்திரவதைகள் தடை செய்துள்ளபோதிலும் நடைமுறையில் பல நாடுகளில் சித்திரவதைகள் தொடரவே செய்கின்றது. இது முற்றாக தடுத்து நிறுத்த வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்”, என்றார். அத்துடன் சித்திரவதைகள் என்பது மனித கெளரவத்தை மறுப்பதாகவம் அவமதிப்பதாகவும் அமைந்துள்ளது, எனவும் அவர் தெரிவித்தார்.தற்போதைய நிலையில் நாடுகளில் மனப்போக்கு பயங்கரவாதத்திற்கெதிரான போரிற்கான ச சித்திரவதைகள் தொடர்பில் அக்கறையற்று அல்லது அதற்கு சார்பான நிலையில் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்..மேலும் இவ்விடயத் தொடர்பாக கருத்து கூறிய திருமதி கால்மி ரே பாதிக்கபட்ட மக்களிற்கான புனர்வாழ்வு உடனடியாக ஆரம்பிக்கபடவேண்டிய அதேவேளை, புனர்வாழ்வு நடவடிக்கைகள் மருத்துவம், உளவளம், சமூக உதவி, அவர்களின் சட்டரீதியான உரிமை ஆகிய அம்சங்கள் உள்ளடக்கபடவேண்டும், என்றும் தெரிவித்தார்.
|
| < முந்தைய | அடுத்த > |
|---|




உலகின் எந்த மூலையிலாவது மக்களுக்கெதிரான சித்திரவதை நடவடிக்கள் செய்யப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று சுவிஸ் வெளிநாட்டமைச்சர் திருமதி கால்மி ரே கருத்து தெரிவித்துள்ளார்.




