|
சூரிச் ஜெனிவாவில் புகைத்தல் தடை |
|
|
|
ரி.என்.ஜே
|
|
1. July 2008 08:20 |
சூரிச், ஜெனிவா மாநிலங்களில் பொதுவிடங்களில் இன்று ஜுலை முதலாம் திகதியில் இருந்து புகைத்தல் தடைசெய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கபட்டுள்ளது. இப்புதிய சட்டத்தில் படி இன்று 01.07.2008 இலிந்து மேற்படி இரண்டு மாநிலங்களிலும் பொதுவிடங்கள், தொடருந்து நிலையம், உணவு விடுதிகள் ஆகியவற்றில் புகைத்தல் முற்றாக தடை செய்யப்படும்.
ஜெனிவா கன்ரோனில் இச்சட்டம் மிகவும் கடுமையாக அமுல்படுத்தபடும் என்றும் மேற்படி தகவிலில் தெரிவிக்கபட்டுள்ளது. பொதுவிடங்களில் புகைப்பதற்காக தனியான இடங்கள் எதுவும் ஒதுக்கபடமாட்டாது. மீறுவோர்கள் மீது மிகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கபடும் என்றும் தெரிவிக்கபட்டுள்ளது.
ஜெனிவாவில் இச்சட்டத்தை மீறும் புகைப்போர் 100 பிராங்கில் இருந்து 1000 பிராங் வரையான தண்டனை பணத்தை செலுத்த நேரிரும் என்றும், சட்டத்தை மீறும் உணவு விடுதிகளுக்கு ஆக்கூடியது 10 000 பிராங் வரை தண்டனை விதிக்க சட்டத்தில் இடமுண்டு.
|