|
பீக்கிங் ஒலிம்பிக் வைபவங்களை பகிஷ்கரிக்க கோரிக்கை |
|
|
|
ரி.என்.ஜே
|
|
3. July 2008 14:48 |
சீனத்தலைநகர் பீக்கிங்கில் நடைபெறவிருக்கும் சர்வதேச ஒலிம்பிக் போட்டி ஆரம்ப வைபவங்களை பகிஷ்கரிக்குமாறு சுவிஸ் ஜனாதிபதியை சுவிஸ் திபெத் மக்கள் இயக்கம் கேட்டுள்ளது. சுவிஸ் ஜனதிபதி “பால்கால் குஷ்பின்” அவர்களுக்கு 60000 திபெத் மக்களின் கையொப்பத்துடன் மேற்படி மனு அனுப்பட்டுள்ளது.
திபெத் மக்களுக்கு எதிராக பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வரும் சீனா ஒலிம்பிக் விளையாட்டை துஷ்பிரயோகம் செய்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 8 ம் திகதி ஒலிம்பிக் போட்டிகளில் ஆரம்ப வைபவம் பீக்கிங்கில் கோலாகலமாக நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
ஜனாதிபதியின் பீங்கிங் வருகை சீன அரசிற்கு பிழையான சைகையை வழங்கும் என்று சுவிஸ் – திபெத் நட்புறவு அமைப்பின் உறுப்பினரான சுவிஸ் பிரஜையான "டன்யேலா லேமான்" பேர்ன் நகரில் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
|