|
ஜெனிவா பல்கலைகழக நூலகத்தில் தீவிபத்து |
|
|
|
ரி.என்.ஜே
|
|
3. July 2008 16:25 |
ஜெனிவா பல்கலைகழக நூலகத்தில் கடந்த ஞாயிறன்று ஏற்பட்ட தீவிபத்தில் 20 000 திற்கு மேற்பட்ட பெறுமதிமிக்க புத்ததங்கள் சேதமடைந்துள்ளது. ஐரோப்பிய கிண்ண இறுதிபோட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் மேற்படி தீவிபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.
மொத்தமாக எரிந்த நூல்களின் பெறுமதி இதுவரை தெரிவிக்கபடவில்லை. 20000 புத்தககங்கள் தீயணைக்க பாவிக்கபட்ட தண்ணீரினால் கடுமையாக சேதமடைந்துள்ளது. இவையனைத்தும் மிகவும் விலையுயர்ந்த நூல்கள் என்று பல்கலைக்கழக நிர்வாகத்தால் தெரிவிக்கபட்டுள்ளது. மேலும் 30000 புத்தகங்கள் சிறியளவில் சேதமடைந்துள்ளன.
தீயணைப்பு படையினர் தம்மால் இயன்றளவிற்கு தண்ணீரினால் புத்தகங்கள் சேதமடையாது தமது கடமையை செய்ய முற்றபட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. தீவிபத்து ஏற்பட்டதற்கான காரணம் என்னவென்பது இதுவரை தெரிவிக்கபடவில்லை.
|