20. November 2008 14:23
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
19. August 2008 23:28
3. October 2008 18:45
15. October 2008 12:52
12. October 2008 00:13
4. October 2008 12:47
தமிழக மீனவரை காக்க வலியுறுத்தி மத்திய அரசில் இருந்து தி.மு.க.விலகவேண்டும் -ஜெயலலிதா அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
6. July 2008 21:21
jayalalitha11.jpgஇலங்கைக் கடற்படையினரிடம் இருந்து தமிழக மீனவர்களைக் காக்க மத்திய அரசை வலியுறுத்தி, அமைச்சரவையில் இருந்து விலக திமுக முன்வர வேண்டும் என அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கடந்த 2-ம் தேதி நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 1,600 பேரை இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்று தாக்கி கொடுமைப்படுத்தி உள்ளனர். அவர்களின் அத்துமீறிய செயல்களால் ஒவ்வொரு மீனவருக்கும் ரூ.15 ஆயிரம் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதைக் கண்டித்து இம் மாதம் 10-ம் தேதி போராட்டம் நடத்தப் போவதாக மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைபேட்டை கிராமத்தில் இருந்து 27.6.2008-ல் மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற மூன்று மீனவர்கள் இன்னும் கரைக்குத் திரும்பவில்லை. அவர்கள் பயன்படுத்திய வலைகள் மட்டும் பிற மீனவர்களால் கரை சேர்க்கப்பட்டுள்ளன. காணாமல் போன மீனவர்களைக் கண்டுபிடிக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மத்திய அரசில் தனக்கு வேண்டிய இலாகாக்களைப் பெறுவதற்காக, முதலில் "அமைச்சரவையில் திமுக பங்கேற்காது' என அறிவித்து, இலாகாக்களைப் பெற்றதும் அமைச்சரவையில் பங்கேற்றது தி.மு.க.

இப்போது தமிழக மீனவர் நலன் காக்க மத்திய அரசு உறுதியான, நிரந்தரமான நடவடிக்கை எடுக்காவிட்டால் அரசுக்கு அளித்து வரும் ஆதரவைத் திரும்பப் பெறுவோம் என தி.மு.க. தலைவரும், முதல்வருமான கருணாநிதி கூற வேண்டும். குறைந்தபட்சம் அமைச்சர் பதவிகளை ராஜிநாமா செய்து மத்திய அரசை மிரட்டினால், தமிழக மீனவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

மத்திய அரசிலும் அங்கம் வகித்துக் கொண்டு, மாநிலத்திலும் ஆட்சியை வைத்துக் கொண்டு "கடிதம் எழுதுகிறேன்,' "தொலைபேசியில் பேசுகிறேன்' என்று சொல்வதை கருணாநிதி நிறுத்த வேண்டும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

 

 
< முந்தைய   அடுத்த >