| சுவிசில் மிகவும் எழுச்சியுடன் நடைபெற்ற "கரும்புலிகள் நாள்" |
|
|
| . | |
| 7. July 2008 06:48 | |
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் 05.07.1987 அன்று புதிய சகாப்தத்தை எழுதிக் கரும்புலி வரலாற்றை ஆரம்பித்து வைத்த கரும்புலி கப்டன் மில்லர் தன்னுடலையே குண்டாக்கி எதிரியை அழித்து 21 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. மில்லர் தொடக்கி வைத்த கரும்புலி சகாப்தத்தில் சங்கமித்த கரும்புலி வீரர்கள் அனைவரையும் ஒருசேர நினைவிற்கொள்ளும் கரும்புலிகள் நாள் தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளையினரால் 06.07.08 ஞாயிற்றுக்கிழமை அன்று சர்க்கான்ஸ் பிரதேசத்தில் நடைபெற்றது. (படத்தொகுப்பு)
இந்நிகழ்வில் பொதுச்சுடரினை தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளைச் செயற்பாட்டாளர் சுதா ஏற்றி வைத்தார். தொடர்ந்து ஈகைச்சுடரினை யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் ஏற்றி வைத்தார். தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளை செங்காளன் மாநிலப் பொறுப்பாளர் ஜெயக்குமார் தேசியக்கொடியினை ஏற்றியதுடன் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்த கரும்புலி கோபுரத்தில் வைக்கப்பட்டிருந்த கரும்புலி திருவுருவப்படத்திற்கு வித்தியாலய மாணவர்கள் மலர்வணக்கம் செலுத்த மண்டபம் நிறைந்திருந்த மக்கள் தமது மலர்வணக்கத்தை கரும்புலி மறவர்களுக்குச் செலுத்தினர்;. தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது. தமிழீழ விடுதலைப்புலிகள் சுவிஸ்கிளை கலைபண்பாட்டுக்கழகம் வழங்கிய எழுச்சி கானங்களைத் தொடர்ந்து சுதந்திர வாசலுக்கான சுடுகலன்கள் எனும் தலைப்பில் கவியரங்கம், எழுச்சி நடனங்கள், யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் அவர்களின் சிறப்புரை, தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளைப் பேச்சாளர் அல்பேட் அவர்களின் சிறப்புரை, செங்காளன் மாநில கலைஞர்கள் வழங்கிய திருப்பங்கள் நாடகம், சர்க்கான்ஸ் தமிழ் வித்தியாலய மாணவியின் கவிதை, கிறபுண்டன் தமிழ் வித்தியாலய மாணவர்களின் வில்லுப்பாட்டு, கிறபுண்டன் தமிழ் வித்தியாலய மாணவியின் பேச்சு என்பன இடம்பெற்றதோடு தேசியக் கொடியிறக்கப்பட்டு தமிழரின் தாரகமந்திரத்தை அனைவரும் வலது கரத்தை உயர்த்தித் தெரிவிக்கக் கரும்புலி மறவர்களின் நினைவு சுமந்த எழுச்சி நிகழ்வு நிறைவுபெற்றது. |
| < முந்தைய | அடுத்த > |
|---|


தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் 05.07.1987 அன்று புதிய சகாப்தத்தை எழுதிக் கரும்புலி வரலாற்றை ஆரம்பித்து வைத்த கரும்புலி கப்டன் மில்லர் தன்னுடலையே குண்டாக்கி எதிரியை அழித்து 21 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. மில்லர் தொடக்கி வைத்த கரும்புலி சகாப்தத்தில் சங்கமித்த கரும்புலி வீரர்கள் அனைவரையும் ஒருசேர நினைவிற்கொள்ளும் கரும்புலிகள் நாள் தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளையினரால் 06.07.08 ஞாயிற்றுக்கிழமை அன்று சர்க்கான்ஸ் பிரதேசத்தில் நடைபெற்றது.