20. November 2008 16:45
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
11. October 2008 23:48
27. August 2008 15:01
4. October 2008 12:47
12. October 2008 00:13
21. August 2008 23:30
மீன் பிடிக்கச் சென்று காணாமல் போன 7 பேரின் குடும்பங்களுக்கு நிதியுதவி அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
7. July 2008 11:03

tamilnadu_goverment.jpgநாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்று காணாமல் போன 7 மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 1 லட்சம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து, அரசு வெளியிட்ட அறிக்கை:-

அக்கரைப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த செண்பகம், மணிவண்ணன், ஆறுமுகம், சதீஷ், வைத்தியலிங்கம், கலியபெருமாள், ராமையன் ஆகியோர் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று காணவில்லை என்று அறிக்கை பெறப்பட்டது.

இதைதொடர்ந்து, மீன் துறை மற்றும் கடலோரக் காவல்படை மூலம் தீவிர தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டது. இதன்பின்பும், அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதையடுத்து, அந்தக் குடும்பத்தினருக்கு முதல்வர் கருணாநிதி தனது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். மேலும், 7 மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 1 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

 
< முந்தைய   அடுத்த >