| நேற்றுப் பொங்கியது ! இன்று பொங்குகிறது ! நாளையும் பொங்க வேண்டும் ! |
|
|
| ஈழப் பிரியன் | |
| 7. July 2008 19:41 | |
1905லே யாழ்ப்பாண வாலிபர் சங்கம் என்ற அமைப்பில் எமது முன்னோர் தமிழருக்குத் தனியான சுதந்திரம் வேண்டும் என பிரித்தானிய அரசுக்கு எதிராகப் பொங்கி எழுந்தனர். அன்று அந்தப் பொங்கலை கொழும்பை வாழ்விடமாகக் கொண்ட பொன்னம்பலம் அருணாசலம் சிங்களத் தலைவர்கள் சார்பாகப் பேசி முழு இலங்கைக்குமான சுதந்திரக் கோரிக்கையாக போராடச் செய்தார். அதனால் அன்றையப் பொங்கலைச் சிங்களம் பறித்துப் போனது. ஈழத் தமிழினத்தை முடிவில்லாத அழிவுகளுக்கும் இழப்புகளுக்கும் ஆளாக்கியது கொழும்புத் தமிழரின் தலைமை.
பிரித்தானிய டொனமூர் அரசியல் திருத்தச் சட்டத்தை ஏற்க மறுத்த தமிழினம்; 1931ல் நடந்த தேர்தலைப் புறக்கணித்துப் பொங்கி எழுந்து தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியது. ஆயினும் 1932ல் இடம் பெற்ற யாழ்ப்பாண இடைத் தேர்தலில் தமிழினம் ஜீ.ஜீ.பொன்னம்பலம் தலைமையில் தனது இன விடுதலை நோக்கிய பொங்கலை முன்னெடுத்தது.
1947ல் இடம் பெற்ற தேர்தலில் சிங்கள வெறிக்கு எதிராக 50க்கு 50 என்ற கோரிக்கையுடன் தமிழனம் பொங்கியது. அந்தப் பொங்கலை டி.எஸ் சேனநாயக்க இரண்டு தமிழ் சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினரின் துரோகத்தனத்தைக் கொண்டு எம்மிடமிருந்து பறித்தார். 1977ல் தமிழ் மக்கள் ஒன்றாகத் திரண்டு தனித் தமிழ் ஈழத்துக்கான மக்கள் ஆணையைத் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு வழங்கியது. கடைத்த வசதி வாய்ப்புக்களை எல்லாம் ஏமாற்று அரசியல் நடத்தி மீளாத துயரத்தில் ஆழ்த்தியது அந்தக் கூட்டணி. அன்றைய பொங்கலை வாய்க்கு எட்டாமல் செய்தது துரோகத் தழிழர் தலைமை. துரோகத்தனத்தைத் துடைத்தெறிந்து தமிழர் துயர் துடைக்க வந்த சரி;திரத் தலைவனாக எழுந்த மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் பொங்கி எழுந்ததால் எழுந்தது தமிழீழப் புலிகள் இயக்கமும் தமிழின எழுச்சியும் நிறைந்த விடுதலைப் பொங்கல். அதனை அணைத்துவிட வந்த அத்தனை படைகளையும் அழித்தும் உண்ணில் அடங்காத தமிழரின் உழைப்பு, உதிரம் ,உயிர், சொத்துச் சுகம் என அனைத்தையும் எரிதணலாக்கிப் பொங்குகிறது தமிழனம். யாழ் பல்கலைக்கழக மாணவர் எதிரி படைகளின் அச்சுறுத்தல் அடக்கு முறைகளுக்கு மத்தியில் மூட்டிய விடுதலைப் பொங்கல் இன்று அகிலம் எங்கும் தமிழினத்தைப் பொங்கியெழ வைத்தக் கொண்டிருக்கிறது. எம்மைப் பயங்கரவாதிகள் எனப் பட்டம் சூட்டித் தடை போட்டும் , அடக்கவும் முனையும் அரசுகளுக்கும் அச்சம் ஊட்ட வல்லது பொங்கு தமிழ். அகில உலக அரசுகளையும் மக்கள் குரலால் வாயடைக்கச் செய்து எமது இனத்தின் விடுதலையை வல்லரசுகளும் புல்லரசுகளும் ஏற்கச் செய்யும் வந்தது இந்தப் பொங்கு தமிழ் நிகழ்வுகள். எமது மண்ணை மீட்கவும் மீட்ட பின் உறுதி தளராது நிலைத்து நிற்கவும் செய்ய வல்லது இந்தப் பொங்கு தமிழ். இன மத பேதம் கடந்து எழுந்து நிற்க வல்ல பொங்கு தமிழ் என்றும் எமது வரலாற்றின் மக்கள் குரலாய் நேற்றும் இன்றும் நாளையும் இருந்தது இருக்கிறது இருக்க வேண்டும். தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் ! தமிழரின் ஒருமித்த குரல் பொங்கு தமிழ் ! கருத்துக்கள் (0)
![]() புதிய கருத்துக்களை எழுதவும்
|
| < முந்தைய | அடுத்த > |
|---|