| ஈராக் தரவேண்டிய 700 கோடி டொலர் கடனைத் தள்ளுபடி செய்தது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் |
|
|
| திங்கள், 07 ஜூலை 2008 15:17 |
ஈராக் தனக்குத் திருப்பிச்செலுத்த வேண்டிய கடன்தொகை அனைத்தையும் தள்ளுபடி செய்யத் தீர்மானித்துள்ளதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அறிவித்துள்ளது.
இரண்டு நாள் பயணமாக ஈராக்கியப் பிரதமர் நூரி அல் மலிக்கி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வந்திறங்கிய சிறிது நேரத்தில் இந்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் ஈராக் அரசுடன் தனது இராஜதந்திர உறவுகளை மீண்டும் ஏற்படுத்தும் முகமாக பக்தாத்திற்கான தனது தூதுவர் ஒருவரையும் ஐக்கிய அரபு எமிரேடஸ் நியமித்துள்ளது.
ஈராக் மற்றும் சுன்னி அரபு நாடுகளுக்கிடையில் உறவுகள் மேம்பட்டு வருவதன் மற்றுமொரு அறிகுறியாக இந்த நடவடிக்கைகள் கருதப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
|

ஈராக் தனக்குத் திருப்பிச்செலுத்த வேண்டிய கடன்தொகை அனைத்தையும் தள்ளுபடி செய்யத் தீர்மானித்துள்ளதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அறிவித்துள்ளது.