| உறவு முறிவின் விளிம்பில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் இடதுசாரிகள் |
|
|
| வா.கி.குமார் | |
| 8. July 2008 08:25 | |
இந்தியா ,அமெரிக்கா இடையிலான இராணுவம் சாரா அணுசக்தி உடன்பாடு பிரச்சினையில், ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கும், அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவளிக்கும் இடதுசாரிக் கட்சிகளுக்கும் இடையிலான உறவு முறிவது உறுதியாகியுள்ளது.
சர்வதேச அணுசக்தி அமைப்புடன், இந்தியா தொடர்பான பிரத்தியேக பாதுகாப்பு உடன்பாடு செய்வதற்கான நடவடிக்கைகளை அரசு முன்னெடுத்துச் செல்ல வேண்டுமா என்பது குறித்து, அரசு பதிலளிக்க இடதுசாரிக் கட்சிகள் திங்கட்கிழமைவரை காலக்கெடு விதித்திருந்தன. இந்த நிலையில், வெளியுறவு அமைச்சரும், ஐக்கிய முற்போ்க்குக் கூட்டணி மற்றும் இடதுசாரிக் கட்சிகளைக் கொண்ட உயர்நிலைக் குழுவின் தலைவருமான பிரணாப் முகர்ஜி, திங்களன்று இடதுசாரிக் கட்சிகளுக்கு பதில் அனுப்பியிருக்கிறார். அதில், இடதுசாரிக் கட்சிகள் கேட்டபடி, ஐ.ஏ.ஈ.ஏ. அமைப்புடன் உடன்பாடு செய்யும் நடவடிக்கைகளை அரசு எப்போது மேற்கொள்ளும் என திட்டவட்டமாக எந்தப் பதிலும் தெரிவிக்கவில்லை. மாறாக, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் உயர்நிலைக் குழுக் கூட்டத்தை வரும் 10ஆம் தேதி கூட்டலாம் என பிரணாப் முகர்ஜி யோசனை தெரிவித்திருக்கிறார். அந்தக் கூட்டத்தில், இறுதி முடிவு எடுக்கலாம் என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். இதற்கிடையில், ஜி-8 நாடுகள் கூட்டத்தில் கலந்துகொள்ள இன்று ஜப்பான் புறப்பட்டுச் சென்ற பிரதமர் மன்மோகன் சிங், தன்னுடன் சென்ற பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, ஐ.ஏ.ஈ.ஏ. அமைப்புடன் உடன்பாடு செய்துகொள்வதற்கான நடவடி்க்கைகளை அரசு விரைவில் முன்னெடுத்துச் செல்லும் என தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக, அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மற்றும் பிற முக்கிய நாடுகளின் தலைவர்களுடனும் பேச இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், நாடாளுமன்றத்தில் தனது அரசு பெரும்பான்மை பலம் இருப்பதை நிரூபிக்கவேண்டிய நிலைவந்தால், அதற்கும் தயாராக இருப்பதாக பிரதமர் தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில், வரும் 10-ம் தேதி கூட்டம் அர்த்தமற்றதாகிவிட்டது என்றும், அரசுக்கு அளித்துவரும் ஆதரவை விலக்கிக் கொள்வதைத் தவிர இடதுசாரிக் கட்சிகளுக்கு வேறு வழியில்லை என்றும், செவ்வாய்க்கிழமை இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி. ராஜா தெரிவித்தார். |
| < முந்தைய | அடுத்த > |
|---|





இந்தியா ,அமெரிக்கா இடையிலான இராணுவம் சாரா அணுசக்தி உடன்பாடு பிரச்சினையில், ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கும், அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவளிக்கும் இடதுசாரிக் கட்சிகளுக்கும் இடையிலான உறவு முறிவது உறுதியாகியுள்ளது.
