|
சுவிஸ் நிறுவனத்தின் மேலதிக எரிபொருள் கட்டணம் அதிகரிப்பு |
|
|
|
ரி.என்.ஜே
|
|
8. July 2008 18:51 |
அதிகரித்து வரும் எரிபொருள் விலை காரணமாக விமான போக்குவரத்து நிறுவனமான “சுவிஸ்” தனது எரிபொருள் கட்டணத்தை மேலும் அதிகரித்துள்ளது.
நீண்ட தூரம் பறக்கும் பயணத்திற்கு மேலதிக எரிபொருள் கட்டணமாக 170 பிராங்குகள் அறவிடப்படும், என “ சுவிஸ்” மற்றும் அதன் சகோதர நிறுவனரான “லுவ்தான்சா” ஆகிய நிறுவனங்கள் சார்பாக அறிவிக்கபட்டுள்ளது.
தற்போதைய கோடைகால விடுமுறையில் செல்லும் பயணிகள் இப்புதிய மேலதிக அதிகரிப்பு கட்டணத்தை செலுத்தவேண்டியிருக்கும்.
ஐரோப்பாவின் பல பெரிய விமான நிறுவனங்கள் தமது மேலதிக எரிபொருள் கட்டணத்தை ஏற்கனவே அதிகரித்துள்ளனர்.
|