20. November 2008 13:17
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
13. October 2008 13:01
12. October 2008 00:13
29. September 2008 22:52
15. October 2008 12:52
4. October 2008 12:47
மீனவர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க அனைத்துக் கட்சிக் குழு: ராமதாஸ் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
8. July 2008 21:13

ramadass.jpgஇந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால், அடிக்கடி தாக்கப்படுவதைத் தவிர்க்க, அனைத்துக் கட்சிக் குழு ஏற்படுத்த வேண்டும் என்றார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.

பா.ம.க. மகளிர் அணி சார்பில் நடைபெற்ற, மது ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொள்ள, செவ்வாய்க்கிழமை ராமநாதபுரம் வந்த அவர் அளித்த பேட்டி:

அனைத்துக் கட்சிக் குழு தில்லியில் பிரதமர், வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து, பிரச்னை தீரும் வரை, அங்கேயே இருந்துவிட்டு திரும்ப வேண்டும்.

தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க முதலமைச்சருக்கு அக்கறை இருந்தால், பிரதமருக்கு கடிதம் எழுதுவதோடு நின்றிருக்க மாட்டார். கச்சத் தீவை மீட்க அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்கள் நடத்தும் காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கு, பாமக முழு ஆதரவு தரும். வியாழக்கிழமை நடைபெறும் மறியல் போராட்டத்தில், பாமக பங்கேற்கும்.

1984-ல் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. அப்போது, அதன் மொத்த வருவாய் ரூ. 139.4 கோடி. 2006-ல் மொத்த வருவாய் ரூ. 7335 கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது, 53 மடங்கு மது வியாபார விற்பனை பெருகி உள்ளது. ஏழை, நடுத்தர மக்கள் கடுமையாக உழைத்து சம்பாதிக்கும் பணம்தான், மதுக்கடைகளுக்கு போகிறது.

மதுவால் பாதிக்கப்படுவது பெரும்பாலும் பெண்களாக இருப்பதால்தான், அவர்களை வைத்து, மது ஒழிப்பு மாநாட்டை பாமக நடத்துகிறது.தமிழகத்தில் கள்ளச் சாராயம், விஷ சாராயம் அதிகமாக புழக்கத்தில் இருக்கிறது.பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி, உச்ச நீதிமன்றத்தில் பாமக சார்பில் வழக்கு தொடர உள்ளோம்.

தமிழகத்தில் திமுக அல்லாத காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியை வரவேற்கிறோம் என்றார் ராமதாஸ்.

 
< முந்தைய   அடுத்த >