20. November 2008 14:46
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
15. October 2008 12:52
29. September 2008 22:52
19. August 2008 23:28
13. October 2008 13:01
27. August 2008 15:01
இடதுசாரிகள் முடிவு: கருணாநிதி வருத்தம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
8. July 2008 21:24

karunanidhi-3.jpgஅணுசக்தி ஒப்பந்தப் பிரச்னையில் சுமுகநிலை ஏற்பட திமுக மேற்கொண்ட முயற்சி வெற்றி பெறாமல் போனது மிகவும் வருத்தம் அளிக்கிறது என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து, செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை அவர் கூறியது:-

அணுசக்தி ஒப்பந்தம் சரியா? அல்லவா? என்பதை விட அந்தப் பிரச்னை பற்றிய விவாதம் காரணமாக இந்தியாவில் அமைந்துள்ள அரசின் நிலைத் தன்மைக்கு ஊனம் வந்து விடக் கூடாது. இதில், எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்பதில் தான் என் முழுக் கவனமும், சிந்தனையும் இருந்தது.

விபரீத விளைவுகளைப் பற்றிக் கவலைப்படக் கூடியவர்கள் தான் மத்திய அரசிலும்-அதனை ஆதரிக்கும் இடதுசாரி அணியிலும் இருந்தவர்கள்-இருப்பவர்கள்.

சுமுகநிலை உருவாவதற்கு திமுக சார்பில் நான் எடுத்த முயற்சிகள் இடையிடையே பலிப்பது போலத் தோன்றின. ஆனாலும், இறுதியாக வெற்றி பெறாமல் போனதற்கு மிகவும் வருந்துகிறேன்.

இயக்கங்களின் கௌரவத் தன்மையை விட, இந்தியாவின் உறுதிப்பாடும் அதற்கான ஒற்றுமையும் காக்கப்பட இன்னும் அவகாசம் இருக்கிறது. இதுவே நான் விடுக்கும் வேண்டுகோள் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

 
< முந்தைய   அடுத்த >