20. November 2008 15:20
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
27. August 2008 15:01
19. August 2008 23:28
21. August 2008 23:30
3. October 2008 18:45
13. October 2008 13:01
அணுசக்தி அபிவிருத்திக்கு சீனா ஒத்துழைக்குமென இந்தியா எதிர்பார்ப்பு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
10. July 2008 11:19
in-chi.jpgஇந்தியாவின் சிவில் அணுசக்தி அபிவிருத்திக்கு சீனா ஆதரவு வழங்கும் என சீன ஜனாதிபதி கு ஜிந்தாவோ, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தெரிவித்துள்ளதாக இந்திய வெளியுறவுச் செயலாளர் சிவ் சங்கர் மேனன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

மன்மோகன் சிங் அரசாங்கம் அமெரிக்காவுடன் மேற்கொள்ளவுள்ள அணுசக்தி ஒப்பந்தத்திற்கு ஆதரவளிக்க முடியாது எனக் கூறி, இடதுசாரிகள் கூட்டணி ஆட்சிக்கான தமது ஆதரவை விலக்கிக்கொண்டுள்ள நிலையிலேயே சீனா ஆதரவளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் நடைபெறும் ஜி-8 நாடுகளின் மாநாட்டில் கலந்துகொண்ட சீன ஜனாதிபதியுடன், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இந்த விவகாரம் குறித்துப் பேச்சு நடாத்தியுள்ளதாகவும் சிவ் சங்கர் மேனன் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த திங்கட்கிழமை ஜப்பானில் நடைபெற்ற செய்தியாளர் மாநாடு ஒன்றில் கருத்து வெளியிட்ட இந்தியப் பிரதமர், இந்த விவகாரம் தொடர்பாக சீனாவுக்கு எந்தவித பிரச்சினைகளும் இருக்கும் என தாம் எதிர்பார்க்கவில்லை எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்தியாவின் மின்சார உற்பத்திக்கான அணுசக்தித் திட்டத்துக்கு, அணுசக்தி விநியோக நாடுகளின் குழுவில் முக்கிய அங்கம் வகிக்கும் சீனாவின் அங்கீகாரம் கிடைக்க வேண்டியது அவசியம் உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இந்தியப் பிரதமருடனான சீன ஜனாதிபதியின் சந்திப்பு குறித்து செய்தி வெளியிட்டிருக்கும் சீன அரச ஊடகம், சீனாவுக்கும் இந்தியாவுக்குமிடையிலான இரு தரப்பு உறவுகளை மேலும் விருத்தி செய்வது தொடர்பிலேயே பேச்சுக்கள் நடந்ததாகக் குறிப்பிட்டுள்ளது.

மேற்படி அணுசக்தி விவகாரம் குறித்த செய்திகள் எதனையும் அந்த ஊடகம் தனது செய்திக் குறிப்பில் குறிப்பிட்டிருக்கவில்லை.

 

 
< முந்தைய   அடுத்த >