| நரேந்திர மோடிக்கு விசா வழங்கக் கூடாதென முன்னர் எடுக்கப்பட்ட முடிவில் எந்த மாற்றமும் இல்லை:அமெரிக்கா |
|
|
| வா.கி.குமார் | |
| 10. July 2008 17:47 | |
|
இதுகுறித்து கருத்து வெளியிட்டிருக்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சக அதிகாரி பெலிஸ் கெயர், ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவை மறு பரிசீலனை செய்யும் சூழல் உருவாகியிருப்பதாக தாங்கள் கருதவில்லையெனத் தெரிவித்துள்ளார். அத்துடன், குடியேற்ற சட்டத்தின் கீழ் சுற்றுலா விசா வழங்க முடியவில்லையென்பது தொடர்பில் நரேந்திர மோடிக்கு அறிவிக்குமாறு அமெரிக்க குடியேற்றத்துறைக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.நரேந்திர மோடி தன் மீதான மனித உரிமை மீறல் புகார்கள் மற்றும் வன்முறைப் புகார்களை பொய்யென நிரூபிக்க வேண்டுமெனவும், சுற்றுலா விசாவில் அமெரிக்கா வருவதற்கு தகுதியானவரென்பதை அமெரிக்க மக்களுக்கும், அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்திற்கும் அவர் காட்ட வேண்டுமெனவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
|
| < முந்தைய | அடுத்த > |
|---|





