| மக்களவைத் தலைவர் பதவியை ராஜிநாமா செய்வாரா சோம்நாத்? |
|
|
| வா.கி.குமார் | |
| 10. July 2008 20:43 | |
|
சோம்நாத் சாட்டர்ஜி மக்களவைத் தலைவர் பதவியை ராஜிநாமா செய்வாரா என்று நிருபர்கள் கேட்டதற்கு, நிலைமைக்கு ஏற்றவாறு அவரே முடிவு செய்வார் என்று பதில் அளித்தார் பிரகாஷ் காரத். ஆதரவை வாபஸ் பெறுவதாக குடியரசுத் தலைவரிடம் கொடுத்த கடிதத்தில் சோம்நாத் சாட்டர்ஜியின் பெயர் இடம் பெற்றுள்ளதா என்று கேட்டதற்கு, மார்க்சிஸ்ட் கட்சியின் அனைத்து எம்.பி.க்களின் பெயர்களும் அதில் உள்ளன என்றார். இப்போதைய சூழ்நிலையில் சோம்நாத் சாட்டர்ஜி, மக்களவைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்று மக்களவையின் முன்னாள் தலைவர் மனோகர் ஜோஷி (சிவசேனை) கூறினார். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது மக்களவைத் தலைவர் பதவி வகித்தவர் மனோகர் ஜோஷி. சோம்நாத் கருத்து மாறியுள்ள அரசியல் சூழ்நிலையில், உங்கள் அடுத்த நடவடிக்கை என்ன என்று சோம்நாத் சாட்டர்ஜியிடம் நிருபர்கள் கேட்டனர். "அதுபற்றி எனக்குத் தெரியும். நீங்கள் எனக்கு சொல்லத் தேவையில்லை. இத்தகைய கேள்வியால் மக்களவைத் தலைவர் பதவிக்கு நீங்கள் மரியாதை தரவில்லை' என்றார் சோம்நாத் சாட்டர்ஜி. 79 வயதான அவர், மேற்கு வங்க மாநிலம் போல்பூர் தொகுதியில் இருந்து மார்க்சிஸ்ட் கட்சி எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். பொதுவாக மக்களவைத் தலைவர் பதவியில் இருப்பவர், ஆளும் கட்சியைச் சார்ந்தவராகவோ அல்லது ஆளும் கூட்டணிக்குச் சாதகமானவராகவோ இருப்பார். இப்போது, இடதுசாரிகள் ஆதரவை வாபஸ் பெற்று, எதிரணிக்குச் சென்றுவிட்டதால், உயர்ந்த பதவியான மக்களவைத் தலைவர் பதவியில் சோம்நாத் சாட்டர்ஜி நீடிப்பது அரசியல் ரீதியாக சரியானதல்ல என்ற கருத்து நிலவுகிறது. |
| < முந்தைய | அடுத்த > |
|---|




இடதுசாரி கட்சிகள் மத்திய அரசுக்கு ஆதரவை விலக்கிக் கொண்டிருப்பதால், மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி, பதவியை ராஜிநாமா செய்வது பற்றி அவரே முடிவு செய்து கொள்வார் என்று கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கூறினார்.
