|
நவீன கைத்தொலைபேசி ஐபோன் இன்று விற்பனை ஆரம்பம் |
|
|
|
ரி.என்.ஜே
|
|
11. July 2008 19:45 |
பல நாட்களாக எதிர்பார்திருந்த நவீன கைத்தொலைபேசியான ஐபோன்களின் விற்பனை இன்று 11.07.2008 சுவிற்சர்லாந்தில் சட்டபூர்வமாக ஆரம்பமானது. சுவிஸ்கொம்,ஒறேஞ் ஆகிய நிறுவனங்களின் ஐபோன்கள் விற்பனை ஆரம்பமானவுடேனேயே பல ஆயிரக்கணக்கான ஐபோன்கள் விற்பனையாகின. விற்பனை ஆரம்பமாக முன்பே ஐபோன்களை பெற்றுக்கொள்ள பல ஆயிரக்கணக்கான மக்கள் வி்ற்பனை நிலையங்களுக்கு முன்பாக காத்திருந்தனர்.
நவீன கைத்தொலைபேசிகளான ஐபோன்கள் இணையவசதி, ஜீபிஎஸ் எனப்படும் நவிகேசன் வசதி போன்ற பல்வேறு சேவைகளை வழங்கும் “பல்சேவைக்கருவியாக விளங்குகின்றது. உலகின் புதிய வரவான “ஐபோன்கள்” மக்களிடையே மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுவிஸ்கொம் நிறுவன தகவலின் படி கையிருப்பில் இருந்த அனைத்து ஐபோன்களும் உடனடியாகவே விற்று தீர்ந்து விட்டதாகவும் அடுத்த வழங்கலுக்காக காத்திருப்பதாகவும், தெரிவிக்கபட்டுள்ளது.
|