|
சூரிச் விமானநிலையத்தில் முதல் அரையாண்டில் அதிகளவு பயணிகள் |
|
|
|
ரி.என்.ஜே
|
|
11. July 2008 21:15 |
2008 ம் ஆண்டின் முதலாவது அரையாண்டு காலப்பகுதியில் மொத்தம் 10.6 மில்லியன் பயணிகள் சூரிச் விமான நிலையத்தை பயன்படுத்தியுள்ளனர். இது 2007 ம் ஆண்டின் இதே காலப்பகுதியை விட 9.3 வீதம் அதிகமானதாகும்.
முதல் அரையாண்டுக் காலப்பகுதியில் 138 343 பறப்புக்கள் சூரிச் விமானநிலையத்தில் வந்தடைந்தகவோ இங்கிருந்து பறப்பை மேற்கொண்டதாகவோ அமைந்திருந்ததாக சூரிச் விமான நிலையத்தை நிர்வகித்து வரும் யூனிக்கியூ நிறுவனம் தெரிவித்துள்ளது. விமானநிலையத்தின் மொத்தப் பறப்புக்கள் கடந்த ஆண்டிலும் பார்க்க 5.7 வீதத்தால் அதிகரித்துள்ளது.
ஜூன் மாதத்தில் மட்டும் 1.9 மில்லியன் பயணிகள் சூரிச் விமான நிலையத்தை பயன்படுத்தியுள்ளனர். கடந்த வருட ஜூன் மாதத்தைவிட இப்பயணிகள் தொகை 6.3 வீதத்தால் அதிகரித்துள்ளது.
|