| இலங்கை கடற்படையினர் தொடர் தாக்குதல்: தமிழக மீனவர்கள் 2 பேர் பலி |
|
|
| வா.கி.குமார் | |
| 12. July 2008 16:43 | |
|
இலங்கை கடற்படையினர் நேற்றிரவு மீன் பிடிக்க கடலுக்குள் சென்ற தமிழக மீனவர்களை துப்பாக்கியால் சுட்டதில் 2 பேர் பலியாயினர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள ஆறுகாட்டுத்துறை கிராமத்தை சேர்ந்த மூன்று மீனவர்கள் நேற்றிரவு மீன் பிடிக்க கடலுக்குள் சென்றனர். அவர்கள் கோடியக்கரை தென்கிழக்குப் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை துப்பாக்கியால் சுட்டனர். இந்த தாக்குதலில் நாராயணசாமி (18), வாசகன் (25) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். முரளி (21) கையில் காயத்துடன் உயிர்தப்பினர். இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அடிக்கடி தாக்கப்படுவது தொடர் கதையாக உள்ளது.
|
| < முந்தைய | அடுத்த > |
|---|




