டிசம்பர் 12 ல் செங்கன் உடன்படிக்கை அமுல்? 31. October 2008 19:00 ரி.என்.ஜே எதிர்வரும் டிசம்பர் 12 ம் திகதியிலிருந்து சுவிற்சர்லாந்து செங்கன் உடன்படிக்கையில் முழுமையாக இணைந்து கொள்ளும் என எதிர்பாரக்கப்படுவதாக புரூசெல்ஸ்ஸில் இன்று வெள்ளியன்று நடைபெற்ற கூட்டத்தில் தெரிவிக்கபட்டுள்ளது.விபரம்
போதைவஸ்து விற்பனையாளருக்கு 15 வருட சிறை 30. October 2008 20:04 ரி.என்.ஜே சுவிற்சர்லாந்தின் தென்மாநில நகரமான பெலின்ஸோனா நகர நீதிமன்றம் போதைப்பொருளை சந்தைப்படுத்திய கொசொவோ நாட்டைச் சேர்ந்த 42 வயது நபருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
விபரம்
சுவிற்சர்லாந்தின் பல்வேறு பகுதிகளிலும் புதன் மாலையிலிருந்து ஆரம்பித்த பனிவீழ்ச்சி இரவு முழுவதும் தொடர்ந்ததால் வியாழன் காலை போக்குவரத்து பெரிதும் பாதிகபட்டடிருந்தது. தொடரூந்து சேவையிலும் தாமதங்கள் ஏற்பட்டன. காலை 9.00 மணிக்கு பின்னரே தொடரூந்து சேவை வழமைக்கு திரும்பியது.
இலங்கை முப்படைபடைகள் ஆண்மையிழந்தவை –ரஜினிக்காந்த் 1. November 2008 18:58 வா.கி.குமார் 35 வருடமாக தங்களது சுதந்திரத்துக்காக ஆயுதமேந்திவரும் தமிழ் மக்களின் போராட்டத்தை முப்படைகளும் கொண்டு சிங்கள அரசு முடக்க முடியாமல்போனது அவர்களின் ஆண்மையற்றதையே காட்டுவதாக பிரபல நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
விபரம்
பாகிஸ்தானில் கராச்சி நகரில் 7 வயது சிறுவனுக்கும், 4 வயது சிறுமிக்கும் பால்ய விவாகம் நடக்க இருப்பதாக இருந்தது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் போலீசார் அந்த இடத்துக்கு விரைந்து சென்று அதை தடுத்து நிறுத்தினார்கள்.
அவுஸ்திரேலியக் கிரிக்கட் அணியினர் ஒழுங்கத்துடன் நடப்பதில்லை: சுனில் கவாஸ்கர். 1. November 2008 12:45 PTR. டில்லி டெஸ்ட் கிரிக்கட்டில் கவுதம் காம்பீருக்கும், ஷேன் வாட்சனுக்கும் இடையே மோதல் ஏற்பட்ட விவகாரம் அவுஸ்திரேலியக் கிரிக்கட் அணியின் வீரர்கள், இந்தியக் கிரிக்கட் அணியின் வீரர்களை தூண்டி விடும் வகையில் செயல்பட்டதை சர்வதேசக் கிரிக்கட் சபை (ஐ.சி.சி) நடுவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று இந்திய கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் சுனில் கவாஸ்கர் வலியுறுத்தி உள்ளார்.
விபரம்
சச்சினைத் தொடர்ந்து கங்குலி, ஹர்பஜன் மீதும் கில்கிறிஸ்ட் குற்றக்கணைகள். 1. November 2008 05:21 PTR. இந்திய நட்சத்திர கிரிக்கட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் நேர்மை, விளையாட்டு உணர்வு குறித்து கேள்வி எழுப்பிய அவுஸ்திரேலியக் கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் அடம் கில்கிறிஸ்ட் இப்போது, இந்திய கிரிக்கட் அணியின் மற்றுமிரு நட்சத்திர வீரர்களான சவுரவ் கங்குலி, ஹர்பஜன்சிங் ஆகியோர் மீதும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளதுடன், அவர்களின் விளையாட்டு திறமை குறித்தும் விமர்சித்துள்ளார்.
விபரம்
ஷேன் வட்சனை மோதிய காம்பீருக்கு ஒரு டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் ஆடத்தடை. 31. October 2008 13:06 PTR. அவுஸ்திரேலியக் கிரிக்கட் அணியின் வீரர் ஷேன் வாட்சனை தனது தோள்பட்டையால் மோதி தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இந்திய கிரிக்கட் அணியின் ஆரம்ப ஆட்டக்காரர் கவுதம் காம்பீர் ஒரு டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நாக்பூரில் வரும் 6ஆம் திகதி தொடங்கும் 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் காம்பீர் இடம்பெறமாட்டார்.
விபரம்
25,26.10.2008 ஆகிய இருநாட்களும் நடைபெற இருந்த சுவிசில் வாழும் மாணவர்களை ஊக்குவிக்கும் இசை கருவிகளுக்கான போட்டியான சுருதிலயம் நிகழ்வானது, தற்போதைய தாய்நாட்டின் நிலைமைகள் காரணமாக உறவுக்கு உயிர்கொடுப்போம் என்ற கவனஈர்பு நிகழ்வாக மாற்றப்பட்டு நேற்று (25.10.08) முன்னெடுக்கப்பட்டு, இன்றும் ( 26.10.08) நடைபெற்றது.(படத்தொகுப்பு)
25,26.10.2008 ஆகிய இருநாட்களும் நடைபெற இருந்த சுவிசில் வாழும் மாணவர்களை ஊக்குவிக்கும் இசை கருவிகளுக்கான போட்டியான சுருதிலயம் நிகழ்வானது, தற்போதைய தாய்நாட்டின் நிலைமைகள் காரணமாக உறவுக்கு உயிர்கொடுப்போம் என்ற கவனஈர்பு நிகழ்வாக மாற்றப்பட்டு முன்னெடுக்கப்பட்டது. (படத்தொகுப்பு)
தமிழர் புனர்வாழ்வுக்கழக அனுசரனையுடன் ஐரொப்பிய நுண்கலை மையம் சுவிஸ்சில் இரண்டாவது தடவையாக நடாத்தும் ராகமாலிகா ஐப்பசி மாதம்18 ஆம் திகதி காலை 9 மணிக்கு ஆரம்பமாகி 19 ம் திகதி மாலை 8 மணிக்கு நிறைவு பெற்றது. (படத்தொகுப்பு)