|
பாராக் ஒமாமாவின் ஆதரவு திடீரென குறைந்தது- த நியூஸ் வீக் |
|
|
|
வா.கி.குமார்
|
|
14. July 2008 16:27 |
|
அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளாரான பராக் ஒபாமாவின் ஆதரவு திடீரென குறைந்துள்ளதாக ‘த நியூஸ் வீக்’ பத்திரிகை இரண்டு கிழமைக்கு முன்னர் மேற்கொண்ட கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் பராக் ஒபாமா 3 சதவீதத்தால் மாத்திரமே முன்னணியிலுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
எதிர்வரும் நவம்பர் மாதம் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஜனநாயகக் கட்சி சார்பில் பராக் ஒபாமாவும் குடியரசுக் கட்சி சார்பில் ஜோன்மைக்கெய்னும் போட்டியிடுகின்றனர்.
இந்த இருவரில் அமெரிக்க ஜனாதிபதியாக வருவதற்கு யாருக்கு அதிக வாய்ப்புள்ளதென “த நியூஸ் வீக்” பத்திரிகை கடந்த மாதம் கருத்துக்கணிப்பொன்றை நடத்தியுள்ளது.
இந்தக் கருத்துக்கணிப்பின் போது பராக் ஒபாமாவுக்கு ஜோன்மைக்கெய்னை விட 15 சதவீத ஆதரவிருப்பதாக தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் அந்தப் பத்திரிகை மீண்டுமொரு கருத்துக்கணிப்பை மேற்கொண்டுள்ள நிலையில், பராக் ஒபாமாவுக்கு 3 சதவீத ஆதரிவிருப்பதாக தெரியவந்துள்ளது.
இதில் பராக் ஒபாமா 44 சதவீத ஆதரவையும் ஜோன்மைக்கெய்ன் 41 சதவீத ஆதரவை பெற்றுள்ளனர்.
முக்கிய பிரச்சினைகளில் பராக் ஒபாமா தனது நிலைப்பாட்டை அடிக்கடி மாற்றுவதாக ஹிலாரி கிளின்டனின் ஆதரவாளர்கள் கருதுவது பராக் ஒபாமாவின்; இந்த சரிவுக்கான காரணமென சுட்டிக்காட்டப்படுகிறது.
|