| ராமேசுவரத்தில் விஜயகாந்திடம் கேள்வி கேட்ட மூதாட்டி |
|
|
| வா.கி.குமார் | |
| 14. July 2008 16:37 | |
|
மீனவர்களுக்கு ஆதரவாக, ராமேசுவரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிக் கொண்டிருந்த விஜயகாந்திடம், மூதாட்டி ஒருவர் கேள்வி கேட்டு, அதற்கு அவர் பதிலளித்ததை அனைவரும் ரசித்தனர். ராமேசுவரத்தில், மீனவர்களுக்கு ஆதரவாக தேமுதிக ஆர்ப்பாட்டம் நடத்தியது. அப்போது, கூட்டத்தினிடையே திறந்த வேனில் நின்று கொண்டு பேசிய கட்சியின் தலைவர் விஜயகாந்த், "எனக்கு ஓட்டு போட்டு ஆட்சியில் ஒருமுறை உட்கார வைத்துப் பாருங்கள். நான் என்னென்ன செய்யப் போகிறேன் என அப்போது புரியும்' என்றார். அப்போது, அவரது பேச்சைக் கேட்க கூட்டத்துக்கு வந்திருந்த மூதாட்டி, "மற்ற முதல்வர்களைப் போலத் தான் உங்களைப் பார்க்கவும் காத்துக் கிடக்கணும். தேர்தல் நேரத்தில் எதையாவது சொல்லுவது அரசியல்வாதிகளுக்கு சகஜம் தானேப்பா. யாருமே ஜெயிச்சுட்ட பிறகு யாரையும் கண்டுக்கிறதில்லை' என்றார். இதற்கு விஜயகாந்த், "ஆட்சியில் என்னை உட்காரவைத்த பிறகு கேளுங்கள். நீங்கள், இப்போது ஆட்சியில் உள்ளவர்களிடம் இப்படி பேச முடியுமா?. ஓட்டுப் போடும் உங்களுக்கு கேட்கவும் உரிமை இருக்கிறது. வாழ்க்கை முடிவதற்குள் ஏதாவது செய்து விட்டுத்தான் போவேன்' என்று பதிலளித்தார். இதனைக் கேட்டவுடன், அங்குக் கூடியிருந்த மக்கள் கைதட்டி ரசித்தனர். |
| < முந்தைய | அடுத்த > |
|---|




