29. August 2008 19:33
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
3. August 2008 15:57
27. August 2008 15:01
21. August 2008 23:30
8. August 2008 18:51
15. August 2008 17:36
மீனவர்கள் சுட்டுக் கொலை தமிழக காங்கிரஸ் கடும் கண்டனம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
14. July 2008 16:46

congrash.jpgஇலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் இரண்டு பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வீ. தங்கபாலு கூறினார்.

 இதுகுறித்து சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறியது:

வேதாரண்யம் அருகில் மீனவர்கள் கொல்லப்பட்ட செய்தி நெஞ்சை உலுக்குவதாக உள்ளது. இலங்கையில் உள்ள தமிழர்களை கொன்றுவந்த சிங்கள அரசு, தமிழகத்தில் உள்ள தமிழர்களையும் கொல்வது மிகுந்த கண்டனத்துக்கு உரியது.

மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படும் பிரச்னையில் உடனடியாக தலையிட்டு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

தமிழக அரசு இந்தப் பிரச்னையில் தேவையான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. தமிழக அரசும், மத்திய அரசும் இணைந்து நம்முடைய எல்லைப் பகுதியில் பாதுகாப்பைத் தீவிரப்படுத்த வேண்டும்.

வரும் நாள்களில் தில்லி செல்லும்போது பிரதமர், வெளியுறவு அமைச்சர் ஆகியோரிடம் இதுகுறித்து நேரில் வலியுறுத்துவேன்.

ஆட்சியில் பங்கு? தமிழகத்தில் ஆட்சியில் பங்கு கேட்பது குறித்து காங்கிரஸ் தலைவர்கள் அனைவருடனும் கலந்து பேசுவோம்.

புதிய செயற்குழுவிலும் இதுகுறித்து விவாதித்து காங்கிரஸ் தலைமைக்குத் தெரியப்படுத்துவோம். இது தனிப்பட்ட நபர் எடுக்கும் முடிவு அல்ல.

காங்கிரஸ் தலைமையில் கூட்டணி...

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தலைமையில் கூட்டணி என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். காங்கிரûஸ முன்னிலைப்படுத்தும் செய்திகளை வரவேற்கிறேன்.

ஆனால், அதேநேரத்தில் தமிழகத்தில் தற்போதுள்ள கூட்டணியில் எந்தக் குழப்பமும் இல்லை. மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசும், தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான அரசும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. மத்திய அரசில் பா.ம.க.வும் அங்கம் வகிக்கிறது.

பா.ம.க. நிபந்தனை இல்லை நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசை ஆதரிப்போம் என்று ராமதாஸ் ஏற்கெனவே அறிவித்துள்ளார். இதற்கு பா.ம.க. எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை.

காமராஜர் பிறந்தநாள்:

தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் வரும் ஜூலை 15-ம் தேதி தமிழகம் முழுவதும் காமராஜர் பிறந்தநாள் சிறப்பாகக் கொண்டாடப்படும். இதற்காக கட்சி நிர்வாகிகள் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர் என்றார் தங்கபாலு.

சோனியாவின் முடிவை எதிர்ப்பவர்கள் காங்கிரஸ்காரர்களே அல்ல!


சோனியாவின் முடிவை எதிர்ப்பவர்கள் உண்மையான காங்கிரஸ்கார்களே அல்ல என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வீ. தங்கபாலு கூறினார்.

வேலூர் எம்.எல்.ஏ. ஞானசேகரன் அலுவலகத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கொடியை சிலர் ஏற்றியது குறித்து கேட்டபோது, "தமிழகத்தில் த.மா.கா. என்ற அமைப்பு கிடையாது. த.மா.கா.வை காங்கிரஸ் உடன் இணைப்பது என்பது நானும் மறைந்த தலைவர் மூப்பனாரும் இணைந்து எடுத்த முடிவு.

யாரோ சிலர் ஆர்வக் கோளாறால் இந்தத் தவறைச் செய்திருக்கலாம்' என்றார்.

 

 
< முந்தைய   அடுத்த >