20. August 2008 20:14
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
30. July 2008 06:43
31. July 2008 18:12
27. July 2008 09:43
3. August 2008 21:01
8. August 2008 18:51
இராக்கில் படைகளைக் குறைக்க அமெரிக்கா திட்டம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
14. July 2008 21:43

flag_usa.jpgஇராக்கில் படைகளைக் குறைக்க அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் புஷ் அடுத்த ஆண்டு ஜனவரியில் ஓய்வு பெறுகிறார்.

இதைத் தொடர்ந்து இராக்கிலிருந்து 15 படைப்பிரிவுகள் வாபஸ் பெறப்படக்கூடும் என்று அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் வட்டாரங்களை மேற்கோள் காட்டி அந்த நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள அமெரிக்கப் படைகள் பெரும் சவாலை சந்தித்து வருகின்றன.

தலிபான்கள் அலை, அலையாய் தற்கொலைப்படை தாக்குதல்களை நடத்தி வருவதால் ஏராளமான அமெரிக்க வீரர்கள் பலியாகி வருகின்றனர்.

இதை ஈடுகட்ட ஆப்கானிஸ்தானுக்கு அதிக படைகளை அனுப்பி வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இராக்கில் படைகளை குறைத்துக் கொள்ள முடிவு செய்திருப்பதாக பென்டகன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இராக்கில் அமெரிக்கப் படைகளுக்கு தலைமை வகிக்கும் ஜெனரல் டேவிட் ஹெச் பீட்ராஸýம் இதனை உறுதி செய்துள்ளார்.

இராக்கில் மிகக் குறைந்த அளவிலேயே படைகளை வாபஸ் பெற பரிந்துரைத்துள்ளேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

 
< முந்தைய   அடுத்த >