29. August 2008 19:46
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
14. August 2008 16:37
3. August 2008 15:57
21. August 2008 23:30
27. August 2008 15:01
3. August 2008 21:01
மெக்ஸிகோவில் 8 பேர் சுட்டுக்கொலை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
14. July 2008 22:03

மெக்ஸிகோவின் வடக்குப் பகுதியில் மர்ம நபர் சரமாரியாகச் சுட்டதில் 8 பேர் கொல்லப்பட்டனர்.

இவர்களில் 17 வயதுக்குள்பட்ட 2 சிறுவர்களும், 12 வயது சிறுமியும் அடங்குவர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

குவாமுச்சல் என்ற இடத்தில் சாலையோரம் நின்ற மர்ம நபர் அவ்வழியாக சென்ற 4 வாகனங்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் 8 பேர் அதே இடத்தில் பலியாயினர். 5 பேர் படுகாயமடைந்தனர்.

மெக்ஸிகோவில் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகளை போலீஸôர் முடுக்கி விட்டுள்ளனர்.

இதையடுத்து போலீஸôர் மற்றும் பொதுமக்கள் மீது போதைப் பொருள் கடத்தல் குற்றவாளிகள் தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

2006 முதல் இதுவரை 450 போலீஸôர் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 
< முந்தைய   அடுத்த >