| நேபாளின் புதிய ஜனாதிபதி விரைவில் தெரிவு செய்யப்படவுள்ளார் |
|
|
| வா.கி.குமார் | |
| 15. July 2008 16:29 | |
நேபாள ஜனாதிபதியை விரைவில் தெரிவு செய்ய மாவோயிஸ்ட் மற்றும் யு.எம்.எல் கட்சிகள் முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த தேர்தலில் மாவோயிஸ்ட் கட்சி அதிக இடங்களை கைப்பற்றியுள்ளபோதிலும், ஆட்சியமைப்பதற்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனையடுத்தே மாவோயிஸ்ட், யு.எம்.எல் கட்சிகள் இணைந்து ஆட்சியமைப்பதற்கு முடிவு செய்துள்ளன. மாவோயிஸ்ட் தலைவர் பிரசண்டா பிரதமராக பொறுப்பேற்கவுள்ளார். எனினும் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பது தொடர்பாக குழப்பம் நீடித்து வந்தது. இது தொடர்பாக இரு கட்சிகளும் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதையடுத்தே, இதற்கான உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பது தொடர்பாக இரண்டு நாட்களில் முடிவு செய்யப்படவுள்ளதாக குறிப்பிட்ட யு.எம.எல் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் பீம் ராவல், ஆட்சி, அதிகாரத்தை பகிர்ந்து கொள்வது குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படுமெனவும், தங்கள் கூட்டணியில் நேபாள காங்கிரஸ் கட்சியும் இணையுமென எதிர்பார்ப்பதாகவும் கூறினார். இதேவேளை நேபாள நாட்டின் முதல் ஜனாதிபதியாக தற்போதைய பிரதமர் கிரிஜா பிரசாத் கொய்ராலாவை நியமிக்க வேண்டுமெனவும், இல்லையெனில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்வோம் என்றும் நேபாள காங்கிரஸ் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
|
| < முந்தைய | அடுத்த > |
|---|




நேபாள ஜனாதிபதியை விரைவில் தெரிவு செய்ய மாவோயிஸ்ட் மற்றும் யு.எம்.எல் கட்சிகள் முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



