29. August 2008 19:45
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
8. August 2008 18:51
3. August 2008 21:01
16. August 2008 15:10
14. August 2008 16:37
21. August 2008 23:30
ஈரானைத் தாக்கினால் விபரீத விளைவுகள் ஏற்படும்: அமெரிக்காவுக்கு இந்தியா கண்டனம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
15. July 2008 16:52

ஈரானைத் தாக்கினால் இந்தப் பிராந்தியத்தில் விபரீத விளைவுகள் ஏற்படும் என்று அமெரிக்காவுக்கு இந்தியா கண் டனம் தெரிவித்துள்ளது.

ஈரானைத் தாக்கத் தயாராகுமாறு இஸ்ரேலை அமெரிக்கா கேட் டுக்கொண்டுள்ளது என்று செய்தி வெளியானது. இதையடுத்து அமெரிக்காவின் செயலுக்கு இந்தியா எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

ஈரான் மீது ராணுவ நடவடிக்கை எடுப்பது "ஏற்றுக்கொள்ள முடி யாத சர்வதேச நடத்தை' - ஆகக் கருதப்படும் என்று வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் நவ்தேஜ் சர்னா கூறினார்.

ஈரானின் அணுகுண்டு தயாரிப்பை முறியடிக்க அதன் மீது போர் தொடுப்பது சரியான தீர்வாக அமையாது. இந்த நடவடிக்கையைத் தடுக்க எல்லா நாடுகளும் முயற்சிக்க வேண்டும். ஈரான் மீது தாக்கு தல் நடத்தப்படும் என்ற செய்தி குறித்து இந்தியா மிகவும் கவலை அடைந்துள்ளது என்று அவர் கூறினார்.

அணுகுண்டு தயாரிப்பைக் கைவிடுவது குறித்து சர்வதேச சமூகம் ஈரானிடம் பேச வேண்டும். பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்ப தையே இந்தியா எப்போதும் ஆதரித்து வந்துள்ளது.

ஈரான் மீது ராணுவ நடவடிக்கை எடுத்தால் இந்தப் பகுதியில் பல உயிர்கள் பலியாகும். வளைகுடா நாடுகளில் வசிக்கும் 50 லட்சம் இந் தியர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். அதோடு உலகப் பொரு ளாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்படும்.

அணு குண்டு தயாரிப்பைக் கைவிடுவதற்காக நடைபெற்று வரும் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் ஈரானின் அணு உலைகள் மீது விமானத் தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராக இருக்குமாறும், பக்க பலமாக அமெரிக்கா துணைக்கு நிற்கும் என்றும் அதிபர் புஷ் கூறி யுள்ளதாக பிரிட்டிஷ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த வாரம் அடுத்தடுத்து ஏவுகணை சோதனை களை ஈரான் வெற்றிகரமாக நடத்தியது. அதோடு இந்த ஏவுகணை கள் மூலம் இஸ்ரேலை தாக்க முடியும் என்றும் அறிவித்தது.

 
< முந்தைய   அடுத்த >