| நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி உறுதி: பிரதமர் மன்மோகன் |
|
|
| வா.கி.குமார் | |
| 15. July 2008 20:52 | |
|
அமெரிக்க அணு ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டு அதற்கு மக்கள் முழு ஆதரவு அளிப்பார்கள் என்றார் அவர். அரசுக்கு அளித்து வந்த ஆதரவை இடதுசாரிக் கட்சிகள் விலக்கிக் கொண்ட பிறகு பிரதமர் மன்மோகன் சிங் முதல் முறையாக கருத்துக் கூறியுள்ளார். தில்லியில் மூத்த பத்திரிகையாளர்களைச் சந்தித்து மன்மோகன் சிங் பேசினார். அதன் பிறகு பிரதமர் அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. சர்வதேச அணுசக்தி ஏஜென்சியுடன் செய்து கொள்ளவிருக்கும் உடன்படிக்கையால் இந்தியாவின் அணுகுண்டு சோதனைக்கு எந்தத் தடையும் வராது. இது தொடர்பாக இடதுசாரிக் கட்சிகள் மற்றும் பாஜகவினர் தவறான தகவல்களைக் கூறி வருகின்றனர். நமது மின் தேவையைச் சமாளிக்க பெரும் அளவில் அணு மின் உற்பத்தி மிகவும் அவசியம். அணு மின் உற்பத்திக்கு யுரேனியம் தேவை. அதற்கு தற்போது நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. யுரேனியம் சப்ளை செய்யும் நாடுகளிடமிருந்து யுரேனியத்தைப் பெற இந்த அணு ஒப்பந்தம் வழி செய்கிறது. எனவே இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் பிரதமர். |
| < முந்தைய | அடுத்த > |
|---|




வரும் 22-ம் தேதி நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நிச்சயம் வெற்றி பெறும் என்று பிரதமர் மன்மோகன் சிங் உறுதிப்படக் கூறினார்.



