29. August 2008 19:42
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
21. August 2008 23:30
14. August 2008 16:37
16. August 2008 15:10
8. August 2008 18:51
15. August 2008 17:36
ஹிலாரியின் துணை அதிபர் கனவு கலைகிறது அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
15. July 2008 21:04

hillary_clinton.jpgஅமெரிக்க துணை அதிபர் ஆவதற்கான வாய்ப்புகள் ஹிலாரி கிளிண்டனுக்கு குறைந்து வருகிறது.

ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் போட்டியில் பராக் ஒபாமா வெற்றி பெற்று விட்டதால் ஹிலாரியின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

ஜனநாயக கட்சி ஆட்சியைப் பிடித்தால் துணை அதிபர் பதவி தனக்கே வழங்கப்பட வேண்டும் என்று ஹிலாரி வலியுறுத்தி வருகிறார்.

ஆனால் ஹிலாரியின் கணவர் பில் கிளிண்டனின் காதல் விவகாரங்கள் அதற்கு தடைக்கற்களாக உள்ளன.

இது குறித்து ஒபாமாவுக்கு நெருங்கிய வட்டாரங்கள் கூறுகையில், பொதுவாழ்க்கையில் ஒழுக்கம், தூய்மை மிகவும் முக்கியம். ஆனால் ஹிலாரி குடும்பத்தின் மீது ஏராளமான அழுக்குகள் படிந்திருப்பதால் அவருக்கு துணை அதிபர் பதவி வழங்குவது கடினம் என்று தெரிவித்துள்ளனர்.

முன்னாள் அதிபரான பில் கிளிண்டன், நிதி திரட்டிய விவகாரங்களும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருப்பதால் ஹிலாரியின் துணை அதிபர் கனவு கலைந்து வருவதாக லண்டனிலிருந்து வெளியாகும் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

 
< முந்தைய   அடுத்த >