| கிரீஸில் நிலநடுக்கம்: ஒருவர் பலி |
|
|
| வா.கி.குமார் | |
| 16. July 2008 07:07 | |
|
கிரீஸ் நாட்டில் செவ்வாய்க்கிழமை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் ஒரு பெண்உயிரிழந்தார். கிரீஸின் தீவுப் பகுதியான ரோடஸில் கடலுக்கடியில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அந்தத் தீவில் வசித்து வந்த ஒரு பெண், வீட்டின் மாடிப் படியிலிருந்து தூக்கியெறியப்பட்டார். இதில் அந்த பெண் இறந்ததாக, அத்தீவின் துணை மேயர் கிறிஸ்டோஸ் ஆர்கிரோ தெரிவித்தார். ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தின் பிற சேத விவரங்கள் குறித்து உடனடியாக தகவல் ஏதுவும் வெளியாகவில்லை. |
| < முந்தைய | அடுத்த > |
|---|









